azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 19 Jun 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 19 Jun 2017 (As it appears in 'Prasanthi Nilayam')

Today man has taken to many paths to acquire wisdom. All the knowledge that one has acquired is not true knowledge in the strict sense of the term. Knowledge of the spirit, Atmic knowledge, is the true knowledge. That is Brahma Jnana (Knowledge of the Divine). Work, worship, and wisdom - all begin with service. No matter what service it is, if it is done with love and divine feelings, it becomes worship (upasana). What is wisdom? All actions related to our senses, the fleeting objects of the material world,speak of our ignorance. Wisdom dawns the moment the mind is withdrawn. The thoughtless state between two consecutive thoughts is Brahma Jnana. You are not able to experience this thoughtless state of Brahman and are carried away by fleeting, ephemeral, and momentary things. True wisdom dawns when all thoughts are decimated. Bhagawan's philosophy requires you to practice unity in work, worship, and wisdom. (Divine Discourse, Mar 14, 1999)
TRUE CULTURE CONSISTS IN THE RECOGNITION OF THE UNITY THAT UNDERLIER THE DIVERSITY IN MANKIND - BABA
இந்நாளில், ஞானத்தைப் பெறுவதற்கு, மனிதன் பல வழிகளில் செல்கிறான். ஒருவர் பெற்றுள்ள அனைத்து ஞானமும், உண்மையான ஞானம் அல்ல.ஆத்ம ஞானமே உண்மையான ஞானம். அதுவே ப்ரம்ம ஞானம் ( தெய்வீகத்தைப் பற்றிய ஞானம்), கர்மம்,பக்தி, ஞானம் – அனைத்துமே சேவையில் தான் தொடங்குகின்றன. எந்தச் சேவையாக இருந்தாலும், அது ப்ரேமை மற்றும் தெய்வீக உணர்வுகளோடு ஆற்றப் பட்டால், அதுவே உபாஸனையாக ஆகி விடுகிறது.ஞானம் என்றால் என்ன? நமது புலன்கள் மற்றும் தாற்காலிகமான பொருட்களால் ஆன உலக சம்பந்தமான செயல்கள் யாவும், நமது அறியாமையையே காட்டுகின்றன. மனதை நீக்கி விட்ட தருணமே ஞானம் உதயமாகிறது. இரண்டு தொடர்ந்த எண்ணங்களுக்கு இடையில் இருக்கும் எண்ணங்களற்ற நிலையே ப்ரம்ம ஞானமாகும்.இந்த எண்ணங்களற்ற ப்ரம்ம நிலையை உங்களால் அனுபவிக்க முடியவில்லை;கணத்தில் மறையும், நிலையற்ற,தாற்காலிகமானவற்றால் நீங்கள் ஈர்க்கப் படுகிறீர்கள். அனைத்து எண்ணங்கைளயும் அழித்து விட்டால், ஞானம் உதயமாகிறது. கர்ம,பக்தி, ஞானத்தில் நீங்கள் ஒருமையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதே பகவானின் தத்துவம் ஆகும்.
மனித குலத்தின் வேற்றுமையில் இருக்கும் ஒற்றுமையை உணர்வதில் தான் உண்மையான கலாசாரம் இருக்கிறது - பாபா