azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 08 Jun 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 08 Jun 2017 (As it appears in 'Prasanthi Nilayam')

The Divine is totally free from self-interest; whatever He does is utterly blameless and is solely for the welfare of the world. There is nothing beyond His powers. He is the creator, the protector and the destroyer. When God chooses to protect, no one asks why He protects. On the other hand, when God does not protect, people question His inaction and when the Lord punishes, people ask, “Why does God inflict punishment?” Indeed, such questions are motivated by selfishness and self-interest. Every Divine action is just and righteous. Your duty is to pray to God and secure His Grace. When Sakkubai wanted to join the pilgrims going to Pandharpur, Lord Krishna decided to show to the world her good reputation, and duty-consciousness towards her husband and in-laws. So Krishna assumed her form and subjected Himself to all kinds of harassments from her mother-in-law, while the real Sakkubai was blissfully away in Pandharpur. The Lord is ever ready to subject Himself to any hardship to uphold Dharma and shower Grace on His devotees. (Divine Discourse, Feb 21, 1988)
TO INDULGE IN CONTROVERSIES OVER DIVINE ACTIONS IS SUPREME FOLLY.
GOD ID TRULY SELFLESS AND EVER RIGHTEOUS - BABA
இறைவன் முழுமையாக சுயநலமற்றவன்; அவன் செய்யும் எதுவும் அப்பழுக்கற்றதும், லோக க்ஷேமத்திற்காக மட்டுமே ஆகும்.அவனது சக்திக்கு மீறியது எதுவும் இல்லை. அவனே ஆக்குபவன், காப்பவன், அழிப்பவன். இறைவன் ஒருவரைக் காத்து ரக்ஷிக்கும் போது, ஒருவரும், அவனை ஏன் காக்கிறீர்கள் என்று கேட்பதில்லை.அதே சமயம்,இறைவன் காப்பாற்றாத போது, மனிதர்கள் அவனது செயலாற்றாமையை விமரிசிக்கிறார்கள்; அவன் தண்டிக்கும் போது, மனிதர்கள், ‘’ இறைவன் ஏன் தண்டனை அளிக்கிறான் ? ‘’ என்று கேட்கிறார்கள். உண்மையில் இந்தக் கேள்விகள் எல்லாம் சுயநலம் மற்றும் சுயத் தேவைகளினால் உந்தப் பட்டவை.இறைவனது ஒவ்வொரு செயலும் நியாயமானதும், தார்மீகமானதும் ஆகும். உங்களது கடமை இறைவனைத் தொழுது, அவனது அருளைப் பெறுவதே.பக்த சக்குபாய், பண்டரீபுரம் செல்லும் பக்தர்களோடு சேர்ந்து செல்ல விரும்பிய போது, பகவான் ஸ்ரீகிருஷ்ணர், அவளது நற்புகழையும், கணவன் மற்றும் மாமியார் , மாமனார் மீது அவளுக்கிருந்த கடமை உணர்ச்சியையும் உலகிற்கு எடுத்துக் காட்ட முடிவு செய்தார்.எனவே, பகவான் ஸ்ரீகிருஷணர், அவளது உருவத்தை ஏற்று , உண்மையான சக்குபாய். பண்டரீபுரத்தில் ஆனந்தமாக இருந்த போது, அவளது மாமியாரது அனைத்து கொடுமைகளுக்கும் தன்னை ஆட்படுத்திக் கொண்டார். இறைவன்,தர்மத்தை ரக்ஷிப்பதற்கு, தன்னை எந்த விதமான கஷ்டத்திற்கும் ஆட்படுத்திக் கொண்டு, தன் பக்தர்களுக்கு அருள் பொழிய எப்போதும் காத்திருக்கிறான்.
இறைவனது செயல்களைப் பற்றிய விவாதங்களில் ஈடுபடுவது மிகப் பெரிய தவறாகும். இறைவன் உண்மையிலேயே தன்னலமற்றவனும்,என்றும் தார்மீகமானவனும் ஆவான்- பாபா