azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 01 Jun 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 01 Jun 2017 (As it appears in 'Prasanthi Nilayam')

We must shape ourselves into fit instruments for the spiritual pilgrimage. There are four categories of people: The first and best category is those who pay attention to their own faults and the excellences of others. The second category consists of those who highlight their own excellences as well as the excellences of others (the middlings). The third category (the worse type) is that of those who pay attention to their own excellences and only to the faults of others, and the fourth category (the worst) is of those who present their own faults as excellences and the excellences of others as faults. Each one of you can discover for yourself which category you belong to. Remember this: If you are yearning to become aware of the Full, the Sacred, the Divine Love, the Eternal Soul, the Lord (Bhagawan), you must prepare yourself to be part of the first and best group. Discover your own faults and observe others’ excellences. This is the most desirable spiritual practice. (Divine Discourse, Apr 5, 1981).
LIVE WITHOUT HATING OTHERS, CONDEMNING OTHERS AND SEEKING FAULTS IN OTHERS- BABA
நாம், ஆன்மீகத் தீர்த்த யாத்திரைக்கு ஏற்ற கருவிகளாக, நம்மை உருவாக்கிக் கொள்ள வேண்டும். மனிதர்கள் நான்கு விதமானவர்கள். முதல் மற்றும் மிகச் சிறந்த வகையினர், தங்களது குறைகளிலும், பிறரது உயர்ந்த குணங்களிலும், கவனம் செலுத்துபவர்கள். தங்களது மற்றும் பிறரது உயர்ந்த குணங்களையும் பெரிது படுத்துபவர்கள், நடுத்தரமான இரண்டாவது வகையினர். மூன்றாவது மட்டமான வகையினர், தங்களது உயர்ந்த குணங்களிலும், பிறரது குறைகளிலும் மட்டுமே கவனம் செலுத்துபவர்கள். நான்காவதான மிகவும் மட்டமான வகையினர், தங்களது குறைகளை உயர்ந்த குணங்களாகவும், பிறரது உயர்ந்த குணங்களை, குறைகளாகவும் சித்தரிப்பவர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் எந்த வகையைச் சார்ந்தவர்கள் என்பதை நீங்களே கண்டு பிடித்துக் கொள்ளலாம். நீங்கள், பரிபூரணமான, புனிதமான, தெய்வீக ப்ரேமையான, பரமாத்மாவான, இறைவனை உணர வேண்டும் என ஏங்குபவர்களாக இருந்தால், நீங்கள் முதல் மற்றும் மிகச் சிறந்த வகையினரின் ஒரு அங்கமாக இருக்க உங்களைத் தயார் செய்து கொள்ள வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்களது சொந்த குறைகளைக் கண்டறிந்து, பிறரது உயர்ந்த குணங்களைக் கவனியுங்கள். இதுவே மிகவும் விரும்பத் தக்க ஆன்மீக சாதனையாகும்.
பிறரை வெறுக்காமலும், கண்டனம் செய்யாமலும்,
அவர்களில் குறைகளைத் தேடாமலும், வாழுங்கள் - பாபா