azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 27 May 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 27 May 2017 (As it appears in 'Prasanthi Nilayam')

A person who strays away from righteousness (dharma) meets with greater harm than even physical slavery. There is dread hue and cry now about invasion and bondage to the enemy if you are not alert enough and united enough. But the loss of dharma is an even greater calamity, for what is life worth if one cannot live up to the talents with which one is endowed? These principles are called eternal (sanatana) because their origins are not dated, their author is not identifiable; they are the revelations made in the clarified intellects of impartial sages. They are basic and eternal. They do not represent temporary vagaries. Dharma is not a matter of time and space, to be modified and adjusted to the needs and pressures of the moment. It means a number of fundamental principles that should guide mankind in its progress toward inner harmony and outer peace. (Divine Discourse, Apr 1, 1963)
CULTIVATE YOUR HEART TO RAISE A HARVEST OF TRUTH, RIGHTEOUSNESS, PEACE AND LOVE - BABA
தர்மத்திலிருந்து வழுவிய ஒரு மனிதன், அடிமையாக இருப்பதை விடக் கூட அதிகமான துன்பத்தைச் சந்திக்கிறான். நீங்கள் ஜாக்கிரதையாகவும், ஒற்றுமையாகவும் இல்லா விடில், எதிரிகள் படையெடுத்து வந்து,உங்களை அடிமைப் படுத்தி விடுவதைப் பற்றிப் பெரிதாகச் பேசப்படுகிறது. ஆனால் தர்மத்தை இழப்பது அதை விடப் பெரிய பேராபத்தாகும்; ஏனெனில், ஒருவருக்குக் கொடுக்கப் பட்ட திறன்களுக்கு ஏற்றவாறு ஒருவர் வாழவில்லை என்றால், அந்த வாழ்க்கைக்கு என்ன மதிப்பு இருக்கிறது?இந்தக் கோட்பாடுகள் ஸனாதனமானவை எனப்படுகின்றன; ஏனென்றால், அவை எப்போது தோன்றியவை எனத் தெரியாது, அவற்றை இயற்றியவரையும் கண்டு பிடிக்க இயலாது; வெறுப்பு விருப்பற்ற முனிவர்களின் தெளிந்த புத்திகளில் வெளிப்பட்டவை இவை. அவை அடிப்படையானதும், சாஸ்வதமானதும் ஆகும். அவை தாற்காலிகமான கோளாறுகளைக் குறிப்பவை அல்ல.தர்மம், என்பது, கால தேச வர்த்தமானங்களுக்கு உட்பட்டு, அந்த அந்தத் தருணங்களின் தேவைகள் மற்றும் ஆதிக்கங்களால் மாற்றியோ, சரிக்கட்டவோ செய்யப் படும் ஒன்று அல்ல. அதன் பொருள், மனித குலத்தை, அகத்தில் இசைவையும், புறத்தில் சாந்தியையும் பெறும் வண்ணம் முன்னேற வழிகாட்டும், எண்ணற்ற அடிப்படை கோட்பாடுகளே தர்மம் என்பதாகும்.
உங்கள் இதயம் எனும் நிலத்தை, சத்யம், தர்மம், சாந்தி, ப்ரேமை எனும் அறுவடை கிடைக்கும் வண்ணம் பயிர் செய்யுங்கள் - பாபா