azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 12 May 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 12 May 2017 (As it appears in 'Prasanthi Nilayam')

Gladly share your education and wealth with your fellow human beings. God is the real owner of the wealth you acquire. Remember, the money you earn belongs to God’s Trust. You are His Trustee and accordingly, make proper utilisation of your wealth. Do not hanker over money or other forms of wealth. Instead, constantly contemplate on God. You don’t have to go to caves or forests or ashrams in search of Him. Wherever you are, He is with you. Develop this faith and win over your demonic qualities. Do not forget that what ultimately comes with you is not your wealth or education, but the sin or merit you have accumulated through your actions. Share at least a morsel of what you eat with others. Never forget to practice selfless love and service. Help yourself and help others, this is indeed the greatest spiritual practice (sadhana). Without following these principles, there is no peace and joy, anywhere in the world! (Divine Discourse, Jan 1, 2004)
JUST AS THE SON OR DAUGHTER IS THE RIGHTFUL HEIR TO FATHER’S PROPERTY EVERYONE OF YOU HAVE EQUAL CLAIM TO GOD’S PROPERTY OF LOVE, TRUTH, FORBEARANCE, PEACE AND EMPATHY - BABA
உங்களது கல்வி மற்றும் செல்வத்தை, சகமனிதர்களுடன் சந்தோஷமாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்.நீங்கள் குவிக்கும் செல்வத்தின் உண்மையான எஜமானன் இறைவனே.நீங்கள் சம்பாதிக்கும் பணம் இறைவனது அறக் கட்டளைக்குச் சொந்தமானது என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் அவனது அறங்காவலர்; அதன்படி, உங்களது செல்வத்தை முறையாகப் பயன்படுத்துங்கள். பணம் அல்லது மற்ற விதமான செல்வத்தின் மீது பேராவல் கொள்ளாதீர்கள்.அதற்குப் பதிலாக, இடையறாது இறைவனை தியானியுங்கள். அவனைத் தேடிக் கொண்டு, நீங்கள் குகைகள் அல்லது காடுகள் அல்லது ஆஸ்ரமங்களுக்குச் செல்லத் தேவையில்லை. நீங்கள் எங்கு இருந்தாலும், அவன் உங்களுடன் இருக்கிறான். இந்த நம்பிக்கையை வளர்த்துக் கொண்டு, உங்களது அசுர குணங்களை வெல்லுங்கள். இறுதியில் உங்களுடன் வருவது உங்களது செல்வமோ அல்லது படிப்போ அல்ல, ஆனால் உங்களது செயல்களின் மூலம் நீங்கள் சேர்த்து வைத்துள்ள பாவ, புண்ணியங்களே என்பதை மறக்காதீர்கள். நீங்கள் உண்பதின் குறைந்த பட்சம் ஒரு கவளத்தையாவது மற்றவருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். தன்னலமற்ற ப்ரேமை மற்றும் சேவையைக் கடைப்பிடிக்க ஒருபோதும் மறக்காதீர்கள். உங்களுக்கும் உதவிக் கொண்டு, பிறருக்கும் உதவுங்கள்; இதுவே உண்மையில் மிகச் சிறந்த ஆன்மீக சாதனையாகும். இந்தக் கோட்பாடுகளைப் பின்பற்றாமல், இந்த உலகின் எந்த இடத்திலும் சாந்தி, சந்தோஷங்கள் இருப்பதில்லை.
எவ்வாறு ஒரு மகனோ அல்லது மகளோ, ஒரு தந்தையின் சொத்துக்கு உரிய வாரிசோ, உங்கள் ஒவ்வொருவருக்கும் இறைவனது சொத்தாகிய ப்ரேமை, சத்தியம், பொறுமை, சாந்தி மற்றும் பரிவு ஆகியவற்றிற்கு சம அளவில் உரிமை உண்டு- பாபா