azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 06 May 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 06 May 2017 (As it appears in 'Prasanthi Nilayam')

There are many noble mothers in this world. But Mother Easwaramma was the chosen one. I chose her to be My mother! As Sai’s glory began to spread far and wide, she came to Me one day and said, “Swami, I am pained to see small children of our village walking all the way to Bukkapatnam to attend school. Please construct a small school.” Conforming to her wish, I established a small school. After some time, she wanted a small hospital also to be established here. She said she could not bear to see the mothers taking the trouble of carrying their children to Bukkapatnam for medical treatment. Accordingly I got a small hospital built. The small school that I established has become a big university today. The small hospital that I constructed has become a Super Specialty Hospital. These mighty tasks could be accomplished as a result of the Sathya Sankalpa (genuine noble wish) of Mother Easwaramma and Nitya Sankalpa (Eternal Divine Will) of Sai. (Divine Discourse, May 6 2001)
CONSIDER YOUR COUNTRY AS YOUR OWN MOTHER AND WORK FOR HER PROGRESS.UNDER ANY CIRCUMSTANCES,DO NOT CAUSE ANY HARM TO YOUR MOTHER- BABA
இந்த உலகில் பல உன்னதமான தாய்மார்கள் இருக்கின்றனர். ஆனால், அன்னை ஈஸ்வராம்மா தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் ஆவார்.நானே அவரை எனது தாயாராகத் தேர்ந்தெடுத்தேன் ! சாயியின் புகழ் எங்கும் பரவத் தொடங்கிய போது, அவர் என்னிடம் ஒருநாள் வந்து , ‘’ சுவாமி ! சிறு குழந்தைகள் புக்கப் பட்டிணம் வரை பள்ளிக்கு நடந்து சென்று வருவதைப் பார்க்க எனக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது. இங்கு ஒரு சிறிய பள்ளிக் கூடம் கட்டுங்கள்.’’ என்றார். அவளது விருப்பத்திற்கு ஏற்ப, நான் இங்கு ஒரு சிறிய பள்ளியை உருவாக்கினேன். சில காலத்திற்குப் பிறகு, அவர், இங்கு ஒரு சிறிய ஹாஸ்பிடலையும் கூட கட்ட வேண்டும் என விரும்பினார்.தாய்மார்கள், தங்கள் குழந்தைகளை சிகிச்சைக்காக, புக்கப் பட்டிணம் தூக்கிக் கொண்டு செல்வதை தன்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்று அவர் கூறினார். அவ்வாறே, நான் இங்கு ஒரு சிறிய ஹாஸ்பிடலைக் கட்டச் செய்தேன். நான் கட்டிய அந்த சிறிய பள்ளிக் கூடம் இன்று ஒரு பெரிய பல்கலைக் கழகமாக உருவாகியுள்ளது. நான் கட்டிய அந்த சிறிய ஹாஸ்பிடல், இன்று ஒரு சூப்பர் ஸ்பெஷாலிடி ஹாஸ்பிடலாக ஆகியுள்ளது. இந்த மகத்தான பணிகளை, அன்னை ஈஸ்வராம்மாவின் சத்ய ஸங்கல்பம்( உண்மையான உன்னத விருப்பம்) மற்றும் , சாயியின் நித்ய ஸங்கல்பம்( நிரந்தர தெய்வீக விருப்பம்) ஆகியவற்றின் விளைவாகவே சாதிக்க முடிந்தது.
உங்கள் தாய்நாட்டை, உங்களது தாயாகவே கருதி,அதன் முன்னேற்றத்திற்காகப் பாடுபடுங்கள். எந்த சந்தர்ப்பத்திலும்,
உங்கள் தாய்க்கு எந்தத் தீங்கும் இழைக்காதீர்கள் - பாபா