azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 23 Apr 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 23 Apr 2017 (As it appears in 'Prasanthi Nilayam')

Consider the meaning of the name, Sai Baba. Sa means 'Divine;' ayi means 'mother' and Baba means ‘father’. Your physical parents exhibit love with a dose of selfishness; but Sai, your Divine Parent, showers affection or reprimands only to lead you towards victory in the struggle for self-realisation. You cannot realise God in the outer objective world; He is in the very heart of every being. Gemstones have to be sought deep underground; they do not float in mid-air. Seek God in the depths of yourself, not in the tantalising, kaleidoscopic world. This human birth is granted to you for this high purpose; but, you are now misusing it, like the person who cooked his daily food in the gem-studded gold vase that came into his hands as an heirloom. I desire that you may be inspired to observe the discipline laid down by Me and progress towards the Goal of self-realisation, the realisation of the Sai who shines in your hearts. (Divine Discourse, June 19, 1974)
YOU WORSHIP WITH FAITH AND YOU EXPERIENCE GRACE.
FAITH RESULTS IN GRACE WITHOUT YOUR BEING AWARE OF IT - BABA
“சாய்பாபா’’ என்ற பெயரின் பொருளை எடுத்துக் கொள்ளுங்கள்.’’ சா’’ என்றால் தெய்வீகம், ‘’ ஆயி’’ என்றால் தாய், ‘’பாபா’’ என்றால் தந்தை.உங்கள் உடலியலான பெற்றோர்கள் ஓரளவு சுயநலத்துடன் தான் அன்பை வெளிப் படுத்துகின்றனர். ஆனால் , உங்களது தெய்வீகத் தந்தையும் தாயுமான ’’ சாய்’’, ஆத்ம சாக்ஷாத்காரத்திற்கான போராட்டத்தில் வெற்றியை நோக்கி உங்களை இட்டுச் செல்வதற்காகவே, அன்பைப் பொழியவோ அல்லது கடிந்து கொள்ளவோ செய்கிறார். இறைவனை, பொருட்களாலான வெளி உலகத்தில் காண முடியாது; அவர் ஒவ்வொரு ஜீவராசியின் இதயத்திலும் உறைகிறார். நவரத்தினங்களை, பூமியின் அடி ஆழத்தில் தான் தேட வேண்டும்; அவை நடு வானத்தில் மிதப்பதில்லை. ஆர்வத்தைக் கிளறும், வண்ண ஜாலங்கள் நிறைந்த உலகத்தில் அல்லாது, இறைவனை உங்களது ஆழ் மனதிலிலேயே தேடுங்கள். இந்த மனிதப் பிறவி, ஒரு உயர்ந்த குறிக்கோளை அடைவதற்காக, உங்களுக்குக் கொடுக்கப் பட்டுள்ளது; ஆனால் நீங்கள் அதை, பரம்பரைச் சொத்தாகத் தனது கைகளில் கிடைத்த ரத்தினங்கள் பதிக்கப் பட்ட ஒரு தங்கக் கிண்ணத்தில், தனது அன்றாட உணவைச் சமையல் செய்த ஒருவனைப் போல, தவறாகப் பயன்படுத்துகிறீர்கள். என்னால் விதிக்கப் பட்ட ஒழுங்கு முறைகளைப் பின்பற்றி, ஆத்ம சாக்ஷாத்காரம் எனும் குறிக்கோளை, அதாவது உங்கள் இதயங்களில் பிரகாசிக்கும் சாயியை உணருவதை நோக்கி, முன்னேற நீங்கள் உத்வேகம் பெற வேண்டும் என நான் விரும்புகிறேன்.
நீங்கள் இறை நம்பிக்கையுடன் பிரார்த்திக்கிறீர்கள், இறை அருளை அனுபவிக்கிறீர்கள். இறை நம்பிக்கை, உங்களை அறியாமலே, இறை அருளை அளிக்கிறது - பாபா