azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 20 Apr 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 20 Apr 2017 (As it appears in 'Prasanthi Nilayam')

Ignorance can be cured only by knowledge; darkness can be destroyed only by light. No amount of argument, threat or persuasion can compel darkness to move away. A flash of light is enough to destroy years of darkness! The light is already there in you. But since it is heavily overladen by repressing factors, it cannot reveal itself. Prepare yourself for that flash of illumination! Everyone must achieve it, whether one is striving for it now or not. It is the inevitable end to everyone’s struggles, the goal to which every being, knowingly or unknowingly is proceeding. Do not be afraid of reaching the goal of liberation (Moksha). Do not conceive that stage as a calamity. Liberation indeed is the end of all calamities. It is death to all grief - grief that you will be born again. It is the birth of joy, a joy that knows no decline! (Divine Discourse, 19 Feb 1964)
WITHOUT DEVELOPING DEVOTION TO GOD , NO HUMAN QUALITY CAN GROW - BABA
அறியாமையை, ஞானத்தால் மட்டுமே குணப்படுத்த முடியும்; ஒளியினால் மட்டுமே, இருளைப் போக்க முடியும். எந்த அளவு வாதமோ, அச்சுறுத்தலோ அல்லது அறிவுறுத்தலோ செய்தாலும், இருளை விலகிச் செல்லக் கட்டாயப் படுத்த முடியாது. ஜோதியின் ஒரு கீற்று, பல காலமாக இருந்த இருளைப் போக்குவதற்குப் போதுமானதாகும் ! இந்த ஜோதி உங்களுள்ளே, ஏற்கனவே இருக்கிறது. ஆனால் அதை வலுவான அம்சங்கள்,அடக்கி ஒடுக்கி வைத்திருப்பதால், அது தன்னை வெளிப்படுத்திக் கொள்ள முடியவில்லை. அந்த ஜோதியின் பிரகாசத்திற்கு உங்களைத் தயாராக்கிக் கொள்ளுங்கள் ! அதற்காக ஒருவர் பாடுபட்டாலும் அல்லது படாவிட்டாலும்,ஒவ்வொருவரும் அதை அடைந்தே தீர வேண்டும். ஒவ்வொருவரின் வாழ்க்கைப் போராட்டங்களின் தவிர்க்க முடியாத முடிவும், எதை நோக்கி ஒவ்வொரு ஜீவராசியும், அறிந்தோ அல்லது அறியாமலோ, சென்று கொண்டிருக்கிறதோ, அந்தக் குறிக்கோளும், அதுவே., மோக்ஷத்தை அடைவதைப் பற்றி அச்சம் கொள்ளாதீர்கள்.அந்த நிலை ஒரு பேரிடர் எனக் கருதாதீர்கள். மோக்ஷமே, அனைத்துப் பேரிடர்களின் முடிவாகும். அதுவே, அனைத்து துக்கங்களின் – அதாவது நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டும் என்ற துக்கத்தின், இறப்பாகும்.எந்தக் குறைவுமே இல்லாத ஒரு ஆனந்தம், அதாவது பேரானந்தத்தின் பிறப்பு அதுவே!
இறைவன் பால் பக்தியை வளர்த்துக் கொள்ளாமல்,
எந்த விதமான மனிதப் பண்பும் வளர முடியாது- பாபா