azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 12 Apr 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 12 Apr 2017 (As it appears in 'Prasanthi Nilayam')

It is not possible to progress in the Universe without sacrifice (yajna). Yajna maintains the order of the Universe. Sacrifice pleases the gods; the gods send rain; the rain feeds the crops; the crops yield harvest, the harvest strengthens the limbs and widens the outlook; it broadens the heart and clarifies the vision until man reaches the goal, where there is no more struggle or death. The highest and the most fruitful sacrifice is that of the ego. Crucify it and be free. Dedicate your ego to God and be rich beyond all dreams. Prepare yourself for this supreme status, by engaging in holy action (karma), meaning, karma cleansed in the crucible of righteousness (dharma), and attain God (Brahman - the One Indivisible Absolute) as your reward! Have faith in God; He sees everything; He is everywhere; He is all-powerful. He lives in every heart. (Divine Discourse, Nov 1970)
THE YEAR BECOMES NEW;THE DAY BECOMES HOLY, WHEN YOU SANCTIFY IT
BY SPIRITUAL DISCIPLINE, NOT OTHERWISE - BABA
யக்ஞம் இன்றி , இந்த பிரபஞ்சத்தில் முன்னேற்றம் அடைய முடியாது. யக்ஞம், பிரபஞ்சத்தின் கட்டமைப்பை பராமரிக்கிறது. யக்ஞம் தேவர்களை மகிழ்விக்கிறது ; தேவர்கள் மழையை அனுப்புகிறார்கள்; மழை பயிர்களுக்கு உணவூட்டுகிறது; பயிர்கள் அறுவடையை அளிக்கின்றன; அறுவடை (செய்யப் பட்ட தானியம்), அவயவங்களை வலுப்படுத்தி, பார்வையை விசாலமாக்குகிறது; அது இதயத்தை பரந்ததாக்கி ,அதற்கு மேல் எந்த விதமான போராட்டமோ அல்லது இறப்போ இல்லாத குறிக்கோளை மனிதன் அடையும் வரை திருஷ்ட்டியை தெளிவாக்குகிறது. அஹங்காரத்தைத் தியாகம் செய்வதே மிக உயர்ந்த மற்றும் அதிகப் பயனளிக்கும் யக்ஞம் ஆகும். அதை அழித்து விட்டு, சுதந்திரமாக இருங்கள்.உங்களது அஹங்காரத்தை இறைவனுக்கு அர்ப்பணித்து விட்டு, கற்பனைகளுக்கு எல்லாம் எட்டாத அளவு செல்வந்தர்களாக இருங்கள். கர்மாவில், அதாவது தர்மம் எனும் உலையில் உருக்கி பரிசுத்தப் படுத்தப் பட்ட கர்மாவில், ஈடுபடுவதன் மூலம், இந்த தலை சிறந்த நிலைக்கு உங்களையே தயாராக்கிக் கொண்டு, அந்த பரப்ரம்மத்தையே உங்களது வெகுமதியாகப் பெறுங்கள்! இறைவன் பால் நம்பிக்கை வையுங்கள்; அவன் அனைத்தையும் காண்கிறான்; அவன் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்துள்ளான்; அவன் ஸர்வ வல்லமை படைத்தவன். அவன் ஒவ்வொரு இதயத்திலும் வாழ்கிறான்.
வேறு எந்த முறையிலும் அன்றி, ஆன்மீக சாதனையால் அதைப் பரிசுத்தப் படுத்தினால் மட்டுமே, ஒரு ஆண்டு புதியதாகவும், ஒரு நாள் புனிதமானதாகவும் ஆகிறது - பாபா