azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 08 Apr 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 08 Apr 2017 (As it appears in 'Prasanthi Nilayam')

Devotion is faith, steadiness, virtue, fearlessness, surrender, and absence of egoism. Worship done however elaborately and pompously is sheer waste of time and energy. Why pluck flowers and hasten their death? You may be circumambulating the temple, but be aware that while your feet are taking you round by force of habit, your tongue blabbers the faults of others, or the price of vegetables, or the dishes you propose to cook for lunch. Making the rounds is not to be taken as prescribed for loosening the limbs or giving them some exercise. The senses have to be curbed into obedient servants of the spirit. Before you start on your rounds, which you call pradakshina, offer your mind as dakshina (offering of gratitude) to the Resident of the temple, the Lord. That is the first thing to do, and perhaps the only thing to do. (Divine Discourse, Jan 25, 1963)
THE SPIRITUAL PATH IS THE PATH OF DETACHMENT, OF SENSE CONTROL
AND OF RIGOROUS MIND CONTROL - BABA
பக்தி என்றால், நம்பிக்கை, நிலைகுலையாமை, நல்லொழுக்கம், அச்சமின்மை, சரணாகதி மற்றும் அஹங்காரமின்மை ஆகும். எவ்வளவு விரிவாகவும். படாடோபமாகவும் செய்யப் படும் வழிபாடும் வெறும் காலம் மற்றும் சக்தியை வீணடிப்பதே. மலர்களைப் பறித்து, அவற்றின் மரணத்தை ஏன் துரிதப்படுத்த வேண்டும்? நீங்கள் கோவிலை ப்ரதக்ஷிணம் செய்து கொண்டு இருக்கலாம்; ஆனால், பழக்கத்தினால் உங்கள் கால்கள் சுற்றிக் கொண்டு இருக்கின்றனவே அன்றி, உங்கள் நாக்கு பிறரது குறைகளைப் பற்றியோ அல்லது காய்கறிகளின் விலையைப் பற்றியோ அல்லது மதிய உணவிற்கு நீங்கள் சமைக்க உத்தேசித்து இருக்கும் உணவுவகையைப் பற்றியோ, உளறிக்கொண்டு இருக்கிறது என்பதை உணர்ந்திருங்கள். சுற்றி வருவதை, ஏதோ அங்கங்களை தளர்த்தி விடுவதற்காகவோ அல்லது அவைகளுக்கு ஏதோ பயிற்சி அளிப்பதற்காகவோ என எடுத்துக் கொள்ளக் கூடாது. புலன்களை ஆத்மாவிற்குப் பணிந்து வேலை ஆற்றும் சேவர்களாக கட்டுப்படுத்த வேண்டும். பிரதக்ஷிணா என நீங்கள் கூறும் சுற்றுவதை ஆரம்பிப்பதற்கு முன், அந்தக் கோவிலில் குடி கொண்டுள்ள இறைவனுக்கு உங்கள் மனதை தக்ஷிணையாகக் ( நன்றியுணர்வின் காணிக்கையாக ) கொடுத்து விடுங்கள். நீங்கள் முதலில் செய்ய வேண்டியது , ஏன் , நீங்கள் செய்ய வேண்டிய ஒன்றே ஒன்று அது மட்டும் தான்.
ஆன்மீகப் பாதை, பற்றின்மை, புலனடக்கம் மற்றும்
தீவிர மனக்கட்டுப்பாட்டின் பாதையாகும் - பாபா