azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 06 Apr 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 06 Apr 2017 (As it appears in 'Prasanthi Nilayam')

Devotion and faith are the two oars with which you can ferry the boat across the sea of worldly life. A child told its mother when it went to bed at night, “Mother! Wake me up when I am hungry.” The mother answered, “There is no need child, your hunger will itself wake you up.” So too, when the hunger for God comes, it will itself activate you and make you seek the food you need. God has endowed you with hunger and He supplies the food; He has endowed you with illness and He provides the medicine. Your duty is to see that you get the proper hunger and the right illness, and use the appropriate food or drug! Remember, the Lord is a Mountain of Love (Prema); any number of ants carrying away particles of sweetness cannot exhaust His plenty. He is an Ocean of Mercy without a limiting shore. Devotion is the easiest way to win His grace. (Divine Discourse, Feb 1955)
TOTAL SURRENDER, LEAVING EVERYTHING TO HIS WILL,IS THE HIGHEST FORM OF DEVOTION - BABA
பக்தி மற்றும் நம்பிக்கை என்ற இரு துடுப்புக்களைப் படகில் பயன்படுத்தி, நீங்கள் ஸம்ஸார சாகரம் எனும் கடலை கடந்து விடலாம். ஒரு குழந்தை, இரவில் உறங்கச் செல்வதற்கு முன் தன் தாயிடம், ‘’ அம்மா ! எனக்கு பசிக்கும் போது என்னை எழுப்பி விடு ‘’ என்று கூறியதாம். அதற்கு அந்தத் தாய், ‘’ குழந்தாய் ! அதற்கு அவசியமே இல்லை. உன் பசியே உன்னை எழுப்பி விடும் ‘’ என்று பதிலளித்தாராம். அதைப் போலவே, இறைவனுக்காக பசி வரும் போது, அதுவே உங்களை செயல்படச் செய்து, நீங்கள் நாடும் உணவைத் தேட வைத்து விடும். இறைவன் உங்களுக்கு பசி எடுக்கும்போது, அவனே உணவையும் அளிக்கிறான்; உங்களுக்கு வியாதி தோன்றும்போது, அதற்கான மருந்தையும் தருகிறான். உங்களது கடமை, தகுந்த பசியும், சரியான வியாதியும் வருமாறு பார்த்துக் கொண்டு, அதற்கேற்ற உணவு அல்லது மருந்தை பயன்படுத்துவது தான் ! இறைவன், ஒரு ப்ரேமை மலையைப் போன்றவன்; எத்தனை எண்ணிக்கையிலான எறும்புகள், அதன் இனிப்புத் துண்டுகளை எடுத்துச் சென்றாலும், அதைத் தீர்த்து விட முடியாது. அவன் கரைகளே அற்ற ஒரு கருணைக் கடலாவான். பக்தியே அவனது அருளைப் பெறுவதற்கான எளிதான வழியாகும்.
அனைத்தையும், இறைவனது ஸங்கல்பத்திற்கு விட்டு விட்டு, பரிபூரண சரணாகதி அடைவதே, தலை சிறந்த பக்தியாகும் - பாபா