azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 24 Mar 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 24 Mar 2017 (As it appears in 'Prasanthi Nilayam')

Practice—that is the real thing that matters in spirituality! Scholarship is a burden, it is very often a handicap. So long as God is believed to be far away in temples and holy places, you will feel religion to be a burden and a hurdle. But plant him in your heart and you will feel light, burdenless and in fact, stronger! It is like the food basket – when you carry it on the shoulder, it feels heavy and you feel you are too weak to even carry it during a walk. But sit near a stream and eat it. Though the total weight has not decreased, the consequence of eating the food makes you feel lighter and in fact stronger! Similarly, apply this to the idea of God. Do not carry it on your shoulder, take ‘Him’ in! Let Him blossom within you! Keep the memory of the Lord and His Glory always with you! (Divine Discourse, Feb 18, 1964)
ALL KNOWLEDGE AND SCHOLARSHIP ARE OF NO AVAIL
IF THERE IS NO PRACTICE OF VIRTUE - BABA
நடைமுறையில் கொண்டு வாருங்கள்- அது தான், ஆன்மீகத்தில் உண்மையில் முக்கியமானதாகும் ! பாண்டித்யம் ஒரு சுமையே; அதுவே பெரும்பாலும் ஒரு தடையாகவும் இருக்கும். இறைவன் எங்கோ வெகு தொலைவில் , கோயில்களிலும், புனிதத் தலங்களிலும் இருக்கிறான் என்ற நம்பும் வரை, மதத்தை ஒரு சுமையாகவும், ஒரு தடையாகவுமே நீங்கள் கருதுவீர்கள். ஆனால், அவனை இதயத்தில் பிரதிஷ்டை செய்து விடுங்கள்; நீங்கள் இலகுவாகவும், சுமையற்றும், உண்மையில் அதிக வலிமை படைத்தவர்களாகவும் உணர்வீர்கள்! அது ஒரு சாப்பாட்டுக் கூடை போன்றது – அதை நீங்கள் தோளில் தூக்கிச் செல்லும்போது, அது பளுவானதாகவும், நடந்து செல்கையில், அதை எடுத்துச் செல்லக் கூட இயலாதவர்களாகவும், நீங்கள் உணருகிறீர்கள். ஒரு நீரோடை அருகே அமர்ந்து, அதைச் சாப்பிட்டு விடுங்கள். மொத்த எடை குறையாவிட்டாலும், அந்த உணவைச் சாப்பிட்டதன் விளைவு, உங்களை இலகுவாகவும், உண்மையில் சக்தி வாய்ந்தவர்களாகவும் உணர வைக்கிறது ! இந்தக் கருத்தை, இதைப் போலவே, இறைவன் விஷயத்திலும் பயன்படுத்துங்கள்.அதை உங்களது தோளில் சுமந்து செல்லாதீர்கள், ‘’அவனை’’, உள் வாங்கிக் கொள்ளுங்கள் ! அவன் உங்களுள் மலரட்டும் ! இறைவனைப் பற்றிய சிந்தனை மற்றும் அவனது மாட்சிமையை, உங்களுடன் எப்போதும் வைத்திருங்கள்!
நல்லொழுக்கத்தைக் கடைப் பிடிக்கவில்லை என்றால்,
அனைத்து படிப்பும், பாண்டித்யமும் வீணே -பாபா