azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 18 Mar 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 18 Mar 2017 (As it appears in 'Prasanthi Nilayam')

Man is saved by Vedanta, which is like the roar of the lion; it gives courage and enterprise; it makes one a hero. It does not whine or howl or cry. It instils the highest types of self-confidence. It is the strongest armour against the arrows of fate, a waterproof against the hailstorms of sensual pleasure. It is a curtain keeping out the mosquitoes of worry, which would otherwise rob you of sleep. With a Vedanta-saturated heart, you are a rock on the shore, unaffected by the waves of temptation. Vedanta challenges your spirit of adventure, your own reality. Board the train of spiritual discipline now and you will reach the terminus which is jnana (absolute knowledge of you and of all this). In a train journey you do not get down in the middle when some station attracts you. So too, in the spiritual journey the stations are karma (action), upasana (contemplation), and so on. You have to pass through them, but remember they are not the terminus. The terminus is Realisation. [Divine Discourse, Feb 3 1964]
THE ONE STEADY IN WISDOM STANDS CLOSEST IN THE COMPANY OF THE LORD - BABA
சிங்கத்தின் கர்ஜனையைப் போன்ற வேதாந்தத்தால் மனிதன் காப்பாற்றப் படுகிறான்;அது அவனுக்கு தைரியத்தையும், சாகசத்தையும் அளிக்கிறது; அது ஒருவரை ஒரு மாவீரனாக்குகிறது.அது புலம்பவோ அல்லது ஊளையிடவோ அல்லது அழுவதோ இல்லை. அது மிக உயர்ந்த வகையான தன்னம்பிக்கையை ஊட்டுகிறது.அது விதியின் அம்புகளுக்கு எதிரான வலிமை வாய்ந்த கவசமாகவும், புலனின்பங்கள் என்ற பனிமழைக்கு எதிராக, நீரைப் புகவிடாத ஒன்றாகவும் திகழுகிறது. அது, உங்களது தூக்கத்தைக் கெடுக்க வல்ல கவலைகள் என்ற கொசுக்களை உட்புகாமல் தடுக்கும் ஒரு கொசுவலையும் ஆகும். வேதாந்தம் ததும்பும் ஒரு இதயத்துடன் நீங்கள், கடற்கரையில் உள்ள பாறை போல, கவர்ச்சிகள் என்ற அலைகளால் பாதிக்கப்படாமல் இருக்கிறீர்கள். வேதாந்தம் உங்களது உண்மை நிலையான சாஹஸ உணர்விற்குச் சவால் விடுகிறது.ஆன்மீக சாதனை என்ற ரயிலில் இப்போதே ஏறுங்கள்; நீங்கள் ஞானம் எனும் கடைசி நிலையத்தை அடைவீர்கள். ஒரு ரயில் பயணத்தில், நடுவில் ஒரு ஸ்டேஷன் உங்களை ஈர்க்கிறது என்பதற்காக அங்கு இறங்க மாட்டீர்கள். அதைப் போலத்தான் ஆன்மீகப் பயணத்தில் கர்மா, உபாஸனா போன்றவை.நீங்கள் அவற்றைக் கடந்து செல்ல வேண்டும்; ஆனால் அவையே இறுதி நிலயங்கள் இல்லை என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். உங்கள் இறுதி நிலை தன்னை உணர்தல் என்பதே.
ஞானத்தில் நிலைகொண்ட ஒருவரே இறைவனுக்கு
மிக அருகாமையில் உள்ளவர்- பாபா