azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 10 Mar 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 10 Mar 2017 (As it appears in 'Prasanthi Nilayam')

The mind is the wind that brings to us the smell – foul or fragrant from the world. When the mind turns towards foul, it makes you disgusted. When it turns towards the fragrant, you become happy. The wind gathers the cloud from four quarters; similarly your mind brings into your consciousness many disappointments. It is also the same mind of yours, which scatters away the clouds that darken it or make it feel lost in the night of doubt. Control the mind and you will remain unruffled at all times. This is the secret to undisturbed peace – Shanti, and this is the education that all of you must first secure firmly. To gain this equanimity, you do not need high degrees, but systematic spiritual effort (Sadhana). Then you will be always happy, whether you are poor or rich, appreciated or criticised, prosperous or unlucky. That is an armour without which it is foolish to enter the arena of life. (Divine Discourse, 20 Dec, 1958)
( A PEACEFUL MIND IS THE ABODE OF LOVE - BABA)
மனமே, வாசனையை, அது நறுமணமோ,துர்நாற்றமோ, நமக்கு உலகிலிருந்து கொண்டு வரும் காற்றாகும்.மனம் துர்நாற்றத்தின் பக்கம் திரும்பினால், அது உங்களுக்கு அருவருப்பைத் தருகிறது. அது நறுமணத்தின் பக்கம் திரும்பினால், நீங்கள் மகிழ்ச்சி அடைகிறீர்கள். காற்று, நாலாபக்கங்களிலும் இருந்து மேகங்களைத் திரட்டி வருகிறது; அதைப் போலவே, உங்களது மனமும் பல ஏமாற்றங்களை, உங்களது உணர்வு நிலைக்குக் கொண்டு வருகிறது. உங்களது அதே மனம் தான், அதை இருட்டாக்கும் மேகங்களைக் கலைக்கவும் செய்கிறது அல்லது சந்தேகம் எனும் காரிருளில் தடுமாறவும் செய்கிறது. உங்கள் மனதைக் கட்டுப்படுத்துங்கள்; நீங்கள் எப்போதும் நிலைகுலையாமல் இருப்பீர்கள். இதுவே சாந்தி கிடைப்பதற்கான ரகசியம் ஆகும்; இந்தப் பாடமே நீங்கள் அனைவரும் முதன் முதலில், உறுதியாகப் பற்றிக் கொள்ள வேண்டிய ஒன்றாகும். இந்த சமச்சீரான மனப்பாங்கினைப் பெறுவதற்கு, உங்களுக்கு உயர்ந்த பட்டங்கள் தேவை இல்லை; ஆனால் முறையான ஆன்மீக சாதனை அவசியம். பின்னர், நீங்கள் பாமரரோ அல்லது பணக்காரரோ, போற்றப்பட்டாலும் அல்லது தூற்றப்பட்டாலும், அதிருஷ்டசாலியோ அல்லது துரதிருஷ்டசாலியோ, எப்போதும் மகிழ்ச்சியாகவே இருப்பீர்கள். இப்படிப் பட்ட ஒரு கவசம் இன்றி வாழ்க்கை எனும் அரங்கில் நுழைவது மடமையே.
( சாந்தி நிறைந்த மனமே அன்பின் உறைவிடம் – பாபா)