azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 08 Mar 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 08 Mar 2017 (As it appears in 'Prasanthi Nilayam')

Giving up the little ‘I’ is the true meaning of renunciation (Tyaga). Tyaga does not mean running away from the hearth and home into the jungle. It means sublimating every thought, word and deed as an offering to God and saturating all acts with Divine intent. This is the best spiritual practice to cultivate selfless love. Love gives for ever, it never asks another to give. Shower it, and you will be showered in return. Selfless love thrives on renunciation, they are inseparable. The essential reality of a human being rejects the ego as a blemish. When you sincerely investigate into the question, “Who am I”, you will find that everyone is included in ‘I’, and your love will expand limitlessly. Ego should not be allowed to express itself freely, as it smothers the spring of love. God is love, so all things created by God are filled with love. (Divine Discourse, Jul 17, 1981)
சிறியதாகிய ‘’நான்’’ என்பதை விட்டு விடுவதே, தியாகத்தின் உண்மையான பொருளாகும். தியாகம் என்றால் வீடு, வாசலை விட்டு விட்டு, காட்டிற்கு ஓடுவது என்று பொருளல்ல. அதன் பொருள், ஒவ்வொரு சிந்தனை, சொல் மற்றும் செயலை, இறையார்ப்பணம் என்ற நிலைக்கு உயர்த்தி, அனைத்து செயல்களிலும், தெய்வீக உணர்வைத் ததும்பச் செய்வது என்பதாகும். தன்னலமற்ற ப்ரேமையை வளர்த்துக் கொள்வதற்கு, இதுவே மிகச் சிறந்த ஆன்மீக சாதனையாகும்.அன்பு எப்போதும் கொடுக்கிறது; ஒருபோதும் மற்றவரைத் தருமாறு கேட்பதில்லை. அதைப் பொழியுங்கள்; பதிலுக்கு அது உங்களுக்குப் பொழியப்படும். தன்னலமற்ற ப்ரேமை தியாகத்தில் தான் திளைக்கிறது; இரண்டும் இணைபிரியாதவை. ஒரு மனிதனின் இன்றியமையாத உண்மை நிலை, அஹங்காரத்தை ஒரு குறையாக நிராகரிக்கத் தான் செய்கிறது. ‘’ நான் யார்?’’ என்பதை ஆழ்ந்து ஆராய்ந்தீர்களானால், அனைவரும் அந்த ‘’ நானில்’’ அடங்கி உள்ளார்கள் என்பதைக் காண்பீர்கள்; உங்களது அன்பு கரைகாணாது விசாலமாகி விடும். அஹங்காரம்,அன்பின் ஊற்றை அழித்து விடுமாதலால், அதை தன்னிச்சையாக வெளிப்படுத்த அனுமதிக்கக் கூடாது. அன்பே இறைவன்; எனவே, இறைவனால் படைக்கப் பட்ட அனைத்தும் அன்பால் நிரம்பியவையே.