azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 07 Mar 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 07 Mar 2017 (As it appears in 'Prasanthi Nilayam')

All of you have vast resources of powers. When you do not utilise them while discharging duties to yourself and to the society that sustains you, you are only becoming a target for ridicule. When you are on a railway station platform, waiting for the train that is due and you hear the announcement that it will arrive five hours later, how do you feel? Don’t you fling abusive words at the train? When the mere coaches receive from you such a treatment, how much worse treatment would you deserve if you do not fulfill your duty and your responsibilities to the society? Utilise your skills and learning as consistently and effectively as duty demands. Unless used, even a watch gets rusted, what can be said therefore of unused skill? The body has not been granted by God to be fed, well clothed and to be paraded around in pride. The body has to be exercised to keep it trim as a tool for serving others. (Divine Discourse, June 27, 1981)
நீங்கள் அனைவருமே அளவற்ற சக்தி படைத்தவர்கள்.உங்களுக்கும், உங்களைப் போஷிக்கும் இந்த சமுதாயத்திற்கும், நீங்கள் அவற்றைப் பயன்படுத்தவில்லை என்றால், நீங்கள் ஏளனத்திற்கு மட்டுமே குறியாகிறீர்கள். நீங்கள் ரயில் நிலைய ப்ளாட்ஃபாரத்தில் வர வேண்டிய ரயிலுக்காகக் காத்திருக்கும்போது, அது ஐந்து மணி நேரம் தாமதமாக வரும் என்ற அறிவிப்பைக் கேட்டால், உங்களுக்கு எப்படி இருக்கும்? ரயிலின் மீது வசை பாடுவீர்கள் அல்லவா? வெறும் ரயில் பெட்டிகளுக்கே உங்களிடமிருந்து இப்படிப் பட்ட ஒரு ஏச்சு கிடைக்கும் என்றால், சமுதாயத்திற்கு நீங்கள் ஆற்ற வேண்டிய கடமை மற்றும் பொறுப்புக்களை நீங்கள் செய்யவில்லை என்றால், இதை விட எவ்வளவு மோசமான நடத்தைக்கு நீங்கள் உள்ளாக வேண்டும்? உங்களது கடமைக்கு ஏற்றவாறு, உங்களது திறமை மற்றும் படிப்பை சீராகவும், பயனுள்ளதாகவும் உபயோகப் படுத்துங்கள்.உபயோகப் படுத்தவில்லை என்றால் ஒரு கடிகாரம் கூடத் துருப்பிடித்து விடும்; அப்படி என்றால், பயன்படுத்தாத திறனைப் பற்றி என்னென்பது? உண்டு கொழுத்து, உடை அணிந்து, உலாவித் திரிவதற்காகக் கொடுக்கப் பட்டதல்ல, இறைவன் தந்த இந்த உடல். பிறருக்கு சேவை ஆற்றும் கருவியாகப் பயன்படுவதற்கு ஏற்றவாறு, உடல் பயிற்சியின் மூலம் இந்த உடலைத் திறனுள்ளதாக பராமரிக்க வேண்டும்.