azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 03 Mar 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 03 Mar 2017 (As it appears in 'Prasanthi Nilayam')

All of you have five advisors in your life. They are: “Who, When, Where, What and How”. Before undertaking any action, you must get answers for these five questions. When you get the correct answers for these, the actions based on them, will naturally be right conduct. Unfortunately, most people today act without any concern for these factors. All of you must exercise your own judgement using your powers of observation and discretion, using all the God-gifted instruments to you through the form of organs of perception and action. In every limb of yours, there is divine potency. That divine potency is called ‘Angirasa’. This name is derived from the fact that God is present in every limb (Anga) as an essence (Rasa). Hence, there is no need to search for God outside yourself. You are Divine. All your powers are your divine potencies. (Divine Discourse, 14 Jan, 1997)
உங்கள் அனைவருக்கும், வாழ்க்கையில் ஐந்து ஆலோசகர்கள் இருக்கிறார்கள். ‘’ யார்? எப்போது? எங்கு? ஏன்? மற்றும் எவ்வாறு? ‘’ என்பவையே அவை.எந்த ஒரு செயலில் இறங்கும் முன்பு, இந்த ஐந்து கேள்விகளுக்கும் நீங்கள் விடை காண வேண்டும். இவைகளுக்குச் சரியான விடைகள் உங்களுக்குக் கிடைத்து விட்டால், அவற்றை ஆதாரமாகக் கொண்ட செயல்கள் இயல்பாகவே தார்மீகமானதாக இருக்கும். துரதிருஷ்டவசமாக, இன்று பெரும்பாலான மக்கள் இந்த அம்சங்களைக் கவனிக்காமலேயே செயல்படுகிறார்கள்.நீங்கள் அனைவரும், கர்மேந்திரியங்கள் மற்றும் ஞானேந்திரியங்கள் என்ற இறைவன் அளித்துள்ள பரிசுகளைக் கொண்டு, உங்களது கண்காணிப்பு மற்றும் விவேக சக்திகளை உபயோகப்படுத்தி, உங்களது சுயபுத்தியைப் பயன்படுத்த வேண்டும்.உங்களது ஒவ்வொரு அங்கத்திலும் தெய்வீக சக்தி உள்ளது. இதுவே, ’’ அங்கிரஸ ‘’ எனப்படுகிறது. ஒவ்வொரு அங்கத்திலும் சாரமாக உறைபவன் இறைவனே என்ற சத்தியத்திலிருந்து பெறப்பட்டதே இந்தப் பெயர் . எனவே, வெளிப்புறத்தில் இறைவனைத் தேட வேண்டிய அவசியமில்லை. நீங்களே தெய்வம். உங்களது சக்திகள் அனைத்துமே, தெய்வீக சக்திகளே.