azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 02 Mar 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 02 Mar 2017 (As it appears in 'Prasanthi Nilayam')

Though the source of peace and bliss is within, people seek them in the external, like one pursuing a mirage. Owing to restless activity, endless worry and limitless desires, peace of mind is lost and it has become prey to discontent and misery. At the outset, peace has to be cultivated within ourselves. And then that peace has to be extended to the family. From the home it should be spread to our village. Thus, peace should begin with the individual and spread to the whole society. In the Sai organisation, efforts are made to propagate the values of Truth, Righteousness, Love, Peace and Nonviolence. This is only propagation, but not practice (or demonstration). Mere preaching is of no avail. Of all the virtues, love is the foremost. If love is fostered, all other qualities flow from it. Our degradation is the result of forgetting God. When we remember God, our life will be filled with peace and happiness. (Divine Discourse, Mar 23, 1989)
சாந்தி, சந்தோஷங்களின் மூலாதாரம் ஒருவருள்ளேயே இருந்த போதும் கூட, மனிதர்கள், ஒரு கானல் நீரைத் தேடி அலைபவரைப் போல, அவற்றை வெளி உலகில் , தேடி அலைகிறார்கள்.ஓய்வே இல்லாத உழைப்பு, கரை காணாத கவலை மற்றும் அளவற்ற ஆசைகள் ஆகியவற்றின் காரணமாக மனம் சாந்தியை இழந்து, அது அதிருப்திக்கும், அவஸ்தைகளுக்கும் குறியாகி விட்டது. முதன் முதலில் சாந்தியை நமக்குள்ளேயே வளர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர், அதை குடும்பத்திற்கு விரிவாக்க வேண்டும்.வீட்டிலிருந்து அதை நமது கிராமத்திற்குப் பரப்ப வேண்டும்.இவ்வாறு, சாந்தி தனி மனிதரிலிருந்து தொடங்கி, சமுதாயம் அனைத்திற்கும் பரவ வேண்டும். ஸ்ரீ சத்ய சாய் நிறுவனங்களில், சத்யம், தர்மம், சாந்தி, ப்ரேமை மற்றும் அஹிம்ஸை என்ற பண்புகளை, பரப்பச் செய்வதற்கான முயற்சிகள் எடுக்கப் படுகின்றன. இது பிரசாரமே அன்றி, ஆசாரம் ( கடைப்பிடிப்பது) அல்ல. வெறும் போதனையால் எந்தப் பயனும் இல்லை. அனைத்து பண்புகளிலும் ப்ரேமையே தலையாயதாகும். ப்ரேமை பேணப் பட்டால், மற்ற அனைத்து பண்புகளும் அதிலிருந்து பொங்கி வழிந்து விடும். நமது வீழ்ச்சி, இறைவனை மறந்ததன் விளைவே. இறைவனை நாம் நினைவு கூறும்போது, நமது வாழ்க்கை சாந்தி, சந்தோஷங்களால் நிரம்பி விடும்.