azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 22 Feb 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 22 Feb 2017 (As it appears in 'Prasanthi Nilayam')

One may desire for something good, which is due to an inner prompting (Iccha Shakti). But one cannot fulfill that desire unless one proceeds according to a plan which can guarantee success. The desire has to be developed into a deed. This requires Kriya shakti or the power of action. Above all, realisation depends on Jnana shakti, or the force and clarity of Wisdom, the self-confidence that flows from the mastery of the situation. This is a gift of grace from God - the God installed in the heart. God is Omnipresent. The Gita asserts that His hands and feet are everywhere; so are His eyes, head and face. No one can deny God or ignore Him. When a person denies God, he is denying himself. You must foster faith in God and know that He exists in all. That faith will plant in you humility, courage and reverence. Whatever one plans and executes must be sublimated as an offering to God. (Divine Discourse, 8 Feb 1987)
இச்சா சக்தியின் உள்ளார்ந்த ஒரு உந்துதலினால், ஒருவர் நல்ல ஒன்றை விரும்பக் கூடும்.ஆனால், வெற்றி பெறுவதை உறுதி செய்வதற்கான ஒரு திட்டத்தின் படி ஒருவர் செயல் படவில்லை என்றால், அந்த ஆசையைப் பூர்த்தி செய்ய முடியாது.அந்த ஆசை ஒரு செயலாக உருவெடுக்க வேண்டும்.அதற்கு கிரியா சக்தி அவசியம். எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு நிலைமையை கையாளுவதிலிருந்து எழும் தன்னம்பிக்கை, ஞானத்தின் தெளிவு அல்லது வலிமையான ஞான சக்தியைப் பொறுத்துத் தான், ஒருவர் தன்னை உணர்தல் என்பது உள்ளது. இது, இதயத்தில் கொலு வீற்றிருக்கும் இறைவனிடமிருந்து வரும் அருள் பரிசாகும். இறைவன் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்தவன். ஸ்ரீமத் பகவத் கீதை அவனது கரங்கள் எங்கும் உள்ளன; அவனது கண்கள் தலை மற்றும் முகமும் அப்படியே என்று ஆணித்தரமாகக் கூறுகிறது. எவரும் இறைவனை மறுக்கவோ அல்லது உதாசீனப் படுத்தவோ முடியாது. ஒருவர் இறைவன் இல்லை எனும் போது, தன்னையே இல்லை என்று ஆக்கிக் கொள்கிறார். நீங்கள் இறைவன் பால் நம்பிக்கையை வளர்த்துக் கொண்டு, அவன் அனைத்திலும் உள்ளான் என்பதை உணர வேண்டும். அந்த நம்பிக்கை உங்களுள் பணிவு, தைரியம் மற்றும் பயபக்தியை ஊன்றச் செய்யும். ஒருவர் எதைத் திட்டமிட்டாலும், செயல் படுத்தினாலும், அதை இறையார்ப்பணம் என்ற நிலைக்கு உயர்த்த வேண்டும்.