azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 16 Feb 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 16 Feb 2017 (As it appears in 'Prasanthi Nilayam')

Activity finds fulfilment when wisdom dawns. Sanctified action (Karma) is the path to attain spiritual wisdom (Jnana). Every worthwhile activity must result in purifying the mind. Therefore, no one, not even a recluse or monk can desist from engaging in good deeds. These deeds must originate spontaneously and should not leave any trace of pride in the mind. Nor should any attachment to the result of the deed lead to a craving for claiming it for oneself. Renunciation must be the only source of joy. The Gita recommends 'inaction in action' and asserts that 'inaction’ is the most rewarding ‘action' for those who strive for supreme peace. This attitude is named Karma Sanyasa (non-attachment to action). Action or activity is generally associated with the body only, but the mind is also busy with the world. The Atma alone is the unaffected witness. So, the secret of 'inaction in action' lies in taking refuge in the Atma and in recognising all living beings as fundamentally the Atma. (Divine Discourse, Jan 2, 1987)
ஞானம் பிறக்கும் போது, கர்மா பூரணத்துவம் பெறுகிறது.கர்மாவே, ஞானத்தைப் பெறுவதற்கான பாதையாகும். ஒவ்வொரு பயனுள்ள கர்மாவும், மனத் தூய்மையைத் தர வேண்டும்.எனவே, எவரும், ஒரு சந்நியாசியோ அல்லது துறவியோ கூட நற்கர்மங்களை ஆற்றுவதில் ஈடுபடுவதிலிருந்து விலகி இருக்க முடியாது. இந்தச் செயல்கள் தானாகவே ஊற்றெடுத்து, மனதில், தற்பெருமையின் ஒரு சுவடைக் கூட விட்டுச் செல்லாமல் இருக்க வேண்டும். அதைப் போலவே, அந்தச் செயலின் பலனின் மீதுள்ள பற்றுதல்,ஒருவர் அதை தனது என உரிமை கொண்டாடும் ஒரு ஆவலுக்கும் இட்டுச் செல்லக் கூடாது. துறவு மனப்பாங்கு மட்டுமே ஆனந்தத்தின் மூலாதாரமாக இருக்க வேண்டும். ஸ்ரீமத் பகவத் கீதை, ‘’ செயலில் செயலற்று இருப்பதை’’ அறிவுறுத்தி, பிரசாந்தியை நாடுபவருக்கு, ‘’ செயலற்று இருப்பதே ‘’, மிகவும் பயனளிக்கும் ‘’ செயல்’’ என ஆணித்தரமாகக் கூறுகிறது. இந்த மனப்பாங்கே கர்ம ஸந்யாஸ ( செயலில் பற்றின்மை) எனப் படுகிறது. செயல் என்பது சாதாரணமாக உடல் ரீதியானதாக இருந்தாலும், மனமும் கூட உலக விஷயங்களில் ஆழ்ந்து விடுகிறது. ஆத்மா மட்டுமே, பாதிக்கப் படாத சாக்ஷிபூதமாக இருக்கிறது. எனவே, ‘’ செயலில் செயலற்று இருப்பது’’ என்பதன் ரகசியம்,ஆத்மாவைச் சரணடைந்து, அனைத்து ஜீவராசிகளும் அடிப்படையில் ஆத்மாவே என்று உணருவதில் தான் இருக்கிறது.