azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 15 Feb 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 15 Feb 2017 (As it appears in 'Prasanthi Nilayam')

In the journey of earthly life, people take some wealth for expenses and when they reach the goal, they hand over the balance to some trustworthy friend and sleep soundly. Everyone brings the wealth of love from the moment of his birth. In this Karmakshetra (field of activity) that is the world, it is difficult to safeguard the treasure of Prema (love). Therefore everyone should look for a faithful friend. Today, the only true friend is God. When you hand over the wealth of love to God, it will be easy for you to carry on a life of security and peace. There is no greater teacher than your heart. Time is the greatest preacher. The whole world is a scriptural text. God is the best friend. With full faith in these four, lead your life happily. (Divine Discourse, 17 July 1997)
இந்த உலக வாழ்க்கைப் பயணத்தில், மக்கள் செலவுகளுக்காக கொஞ்சம் செல்வத்தை ஈட்டி, எப்போது அவர்கள் தங்கள் குறிக்கோளை அடைந்து விடுகிறார்களோ, அப்போது, மீதி இருப்பதை , தங்களுக்கு நம்பிக்கையான ஒரு நண்பரிடம் ஒப்படைத்து விட்டு, நிம்மதியாக உறங்குகிறார்கள். ஒவ்வொருவரும் தாங்கள் பிறந்த தருணத்திலிருந்தே அன்பு எனும் செல்வத்தைக் கொண்டு வருகிறார்கள். இந்த உலகம் எனும் கர்மக்ஷேத்திரத்தில், ப்ரேமை எனும் பொக்கிஷத்தைப் பாதுகாப்பது கடினமே. எனவே, ஒவ்வொருவரும் நம்பிக்கையான ஒரு நண்பனைத் தேட வேண்டும். இன்று, இறைவன் ஒருவனே உண்மையான நண்பன்.அன்பெனும் செல்வத்தை எப்போது நீங்கள் இறைவனிடம் தந்து விடுகிறீர்களோ, பத்திரமான மற்றும் அமைதியான வாழ்க்கை நடத்துவது உங்களுக்கு எளிதாகி விடும். உங்கள் இதயத்தை விடச் சிறந்த ஆசான் எவருமில்லை. காலமே மிகச் சிறந்த போதகன். இந்த உலகனைத்துமே ஒரு வேதம் தான். இறைவனே மிகச் சிறந்த நண்பன். இந்த நான்கின் மீது முழு நம்பிக்கை வைத்து, உங்கள் வாழ்க்கையை சந்தோஷமாக நடத்துங்கள்.