azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 13 Feb 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 13 Feb 2017 (As it appears in 'Prasanthi Nilayam')

In ancient times, the sages and saints sacrificed everything for the sake of the welfare of humanity. Even the youth of those times followed suit. They are remembered even today because of their spirit of selfless sacrifice. On the contrary, the youth of today are becoming exceedingly greedy and totally selfish and harbouring feelings of hatred and jealousy. While those in the ancient times were leading a life of Thyaga and Yoga (sacrifice and sense control) the present day youth want to lead a life of bhoga (worldly enjoyments and pleasures), which will only result in roga (diseases). So long as one goes on multiplying desires, one will continue to be in want. When the desires are controlled, prosperity is attained. Greed makes one unhappy and miserable. Only when greed and miserliness are given up can one have an enjoyable and peaceful life. (Divine Discourse, 17 July 1997)
பண்டைய காலத்தில் ஞானிகளும், முனிவர்களும், மனித குலத்தின் நலனுக்காக அனைத்தையும் தியாகம் செய்தார்கள்.அந்நாளின் இளைஞர்களும் கூட அவ்வாறே செய்தனர்.அவர்களது தன்னலமற்ற தியாகத்தின் காரணமாக அவர்கள், இன்றும் கூட நினைவு கூறப் படுகிறார்கள். அதற்கு நேர் மாறாக, இன்றைய இளைஞர்கள் அபரிமிதமான பேராசை கொண்டவர்களாகவும், முழுமையான சுயநலம் படைத்தவர்களாகவும் ஆகி, வெறுப்பு மற்றும் பொறாமை உணர்வைக் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள்.பண்டைய காலத்தவர்கள் தியாகமும், யோகமும்( தியாகம் மற்றும் புலனடக்கம்) கொண்ட வாழ்க்கையை நடத்தியவர்களாக இருந்தார்கள்; இன்றைய இளைஞர்கள் போகமான ( உலகியலான சுகங்கள் மற்றும் இன்பங்கள்) ஒரு வாழ்க்கையை நடத்த விரும்பி, அதன் விளைவாக ரோகத்திற்கு (வியாதிகள்) ஆளாகிறார்கள். ஒருவர் ஆசைகளைப் பெருக்கிக் கொண்டே இருந்தால், அவர் எப்போதும் திருப்தி அற்றவராகவே இருப்பார். ஆசைகளைக் கட்டுப் படுத்தும் போது, வளமை கிட்டும். பேராசை ஒருவரை துக்கமும் துயரமும் கொண்டவர்களாக ஆக்கி விடும். பேராசை மற்றும் கஞ்சத்தனத்தை விட்டு ஒழித்தால் மட்டுமே, ஒருவர் மகிழ்ச்சியான,சாந்தியான வாழ்க்கையைப் பெற முடியும்.