azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 11 Feb 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 11 Feb 2017 (As it appears in 'Prasanthi Nilayam')

What is the root cause of discontentment? It is envy. This has been the besetting human vice from the beginning of time. Only when envy is eradicated from the heart will one have self-satisfaction. The contented person enjoys peace. How does envy arise? When one compares oneself with those who are better off, who hold higher offices, score higher marks or are more handsome. Thus, it arises when one suffers from a consciousness of one’s own inferiority; it is basically discontent over what one lacks. To get rid of this evil quality one has to look at those who are worse off than oneself. In due course one develops a sense of equal-mindedness both towards those who are better off and those who are worse. Such equal-mindedness is a Divine quality. There is nothing wrong in aspiring for higher positions. But one should not feel envious about those who are in such positions. It is a crime to entertain such feelings. (Divine Discourse, 19 Jan, 1989)
அதிருப்திக்கான மூல காரணம் என்ன ? அதுவே பொறாமை.ஆதி காலத்திலிருந்து மனிதனை பீடித்துக் கொண்டு இருக்கும் துர்குணம் இதுவே. பொறாமையை இதயத்திலிருந்து ஒழித்தால் மட்டுமே ஒருவருக்கு சுய திருப்தி இருக்கும். திருப்தியுடைய மனிதன் சாந்தியை அனுபவிக்கிறான். பொறாமை எவ்வாறு எழுகிறது? தன்னை விட செல்வம் படைத்தவர்கள், உயர்ந்த பதவியை வகிப்பவர்கள்,அதிக மதிப்பெண்களைப் பெற்றவர்கள் அல்லது அதிகம் அழகாக இருப்பவர்களோடு, ஒருவர் தன்னை ஒப்பிட்டுப் பார்க்கும் போது. இவ்வாறு, ஒருவர் தனது சொந்த தாழ்ந்த நிலையைப் பற்றிய ஒரு உணர்வால் பாதிக்கப்படும் போது இது எழுகிறது; அடிப்படையில் தனது இல்லாமையினால் ஏற்படும் அதிருப்தியே இது.இந்தத் தீய குணத்தை விட்டொழிப்பதற்கு, ஒருவர் தன்னை விடவே மோசமான நிலையில் இருப்பவர்களைப் பார்க்க வேண்டும்.. காலப் போக்கில், தன்னை விட உயர்ந்த நிலையில் இருப்பவர்கள் மற்றும் தன்னை விட மோசமான நிலையில் இருப்பவர்கள் என்ற இருவரையும், சமச்சீராக நோக்கும் உணர்வை ஒருவர் பெற்று விடுவார்.இப்படிப் பட்ட சமச்சீரான மனப்பாங்கு ஒரு தெய்வீகமான குணமாகும்.உயர்ந்த பதவிகளுக்கு ஆசைப்படுவதில் எந்தத் தவறும் இல்லை.ஆனால், இப்படிப் பட்ட உயர்ந்த பதவிகளில் இருப்பவர்களைக் கண்டு , ஒருவர் பொறாமைப் படக்கூடாது. இத்தகைய உணர்வுகளுக்கு இடமளிப்பது ஒரு குற்றமே.