azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 05 Feb 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 05 Feb 2017 (As it appears in 'Prasanthi Nilayam')

Amongst messengers, there are three kinds. The first kind are those who take the orders of the Lord, disobey Him, and take to such actions which go contrary to the wishes of the Lord. The second kind are those who take what the Lord has said literally and follow without either adding or taking away anything. The results of such work is accepted by the Lord. The third kind are those who take the wishes of the Master and perform the task in such a way that the wishes of the Lord are fulfilled completely and at all costs. They take back to the Master the message of victory. Hanuman is an example of the third kind. This was because Hanuman at all times would only think of Rama, and as he knew very well the power of Rama, he always followed His footsteps. Hanuman’s devotion and faith helped him greatly to recognise the wishes of the Master. (Summer Showers in Brindavan, 1977, Ch 10)
தூதர்கள் மூன்று வகையானவர்கள். முதல் வகையினர், தங்களது எஜமானரிடமிருந்து கட்டளைகளைப் ஏற்றுக் கொண்டு, அவற்றிற்குப் பணியாது, எஜமானரின் விருப்பங்களுக்கு மாறான செயல்களில் ஈடுபடுவர்கள். இரண்டாவது வகையினர், எஜமானர் சொன்னதை அப்படியே எடுத்துக் கொண்டு, அதில் எதையும் கூட்டவோ , குறைக்கவோ செய்யாமல், பின்பற்றுபவர்கள். இப்படிப் பட்ட செயல்களின் பலன்களை எஜமானர் ஏற்றுக் கொள்கிறார். மூன்றாவது வகையினர், எஜமானரின் விருப்பங்களை எடுத்துக் கொண்டு, அவற்றை முழுமையாக, எப்பாடு பட்டாவது பூர்த்தி செய்யும் விதத்தில் பணியாற்றுபவர்கள். அவர்கள் வெற்றிச் செய்தியை, தங்களது எஜமானரிடம் எடுத்துச் செல்வார்கள். ஹனுமான் இந்த மூன்றாவது வகையினருக்கான ஒரு உதாரணமாவார். ஏனெனில் ஹனுமான் எப்போது ஸ்ரீராமரையே சிந்தித்த வண்ணம் இருந்தார்; அவர் ஸ்ரீராமரின் வல்லமையை நன்கு அறிந்திருந்ததால், அவரது திருவடிகளையே எப்போதும் பின்பற்றி வந்தார். ஹனுமாரது பக்தியும், நம்பிக்கையும், தனது எஜமானரது விருப்பங்களைப் புரிந்து கொள்ள , அவருக்கு பெரிதும் உதவியது.