azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 04 Feb 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 04 Feb 2017 (As it appears in 'Prasanthi Nilayam')

The kind of work which the wise do may appear to be the same as that done by an ordinary person. Although in appearance they may be the same, yet the result will be different in both. The work done by an unwise person is always accompanied by a feeling on one’s part that he or she is doing work for one’s own benefit. This kind of work is mixed up with ego; the feeling of selfish benefit will also lead to trouble and sorrow. The kind of work which a wise man does always carries a feeling which makes him identical with the divine aspect; he is aware that he is doing in the name and on behalf of God. He thinks that God is really doing the work, and that he is only an instrument. This will always give a good result and grant satisfaction to all. (Summer Showers in Brindavan, 1977, Ch 10)
ஞானிகள் ஆற்றுகின்ற செயலும், அஞ்ஞானியான ஒரு சாதாரண மனிதன் ஆற்றும் செயலும் ஒன்று போலத் தோன்றலாம். தோற்றத்தில் அவை ஒரே மாதிரியாக இருந்தாலும், இரண்டிலும் ஏற்படும் விளைவுகள் வெவ்வேறாகவே இருக்கும். ஒரு அஞ்ஞானி ஆற்றும் பணி, அதை அவனோ அல்லது அவளோ, தான் தனது ஆதாயத்திற்காகத் தான் செய்கிறோம் என்ற உணர்வுடன் கூடியதாக இருக்கும். இந்த விதமான பணி அஹங்காரத்துடன் கலந்திருக்கும்; சுயநலமான பலனுக்கான உணர்வு மேலும் துன்பத்திற்கும், துயரத்திற்கும் இட்டுச் செல்லும்.ஒரு ஞானி ஆற்றும் பணி, இறைத் தன்மையுடன் அவரை ஒன்றாகச் செய்யும் ஒரு உணர்வை எப்போதும் கொண்டதாக இருக்கும்; அவர் இந்தப் பணியை இறைவன் பெயரிலும், இறைவனுக்காகவும் ஆற்றுகிறார் என்பதை உணர்ந்திருப்பார். உண்மையில் இறைவனே இந்தப் பணியை ஆற்றுகிறான், தான் ஒரு கருவி மட்டுமே என்று அவர் எண்ணுவார். இது எப்போதும் ஒரு நல்ல பலனை அளித்து, அனைவருக்கும் மிகச் சிறந்த திருப்தியை உண்டாக்கும்.