azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 02 Feb 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 02 Feb 2017 (As it appears in 'Prasanthi Nilayam')

Embodiments of Love, work alone brings out the true strength in an individual and shows others what one is capable of. Just as a mirror reflects to us our own face, so also the kind of work you do, describes your true qualities like a barometer. This barometer of work has the capacity to assess your condition and the state of your mind and will demonstrate the kind of qualities you possess (tamasik, rajasikorsatwik). Some people appear to be very calm and noble (satwik), but when they undertake work, we may see that, behind the cloak of satwikquality, is present an amount of harshness. Some people appear to be very harsh and cruel in their words, but when they undertake some work, they become soft and kind. Hence never judge others by their external appearance or by words alone. In fact, no test of human qualities is more stringent than the examination of the work one does. (Summer Showers in Brindavan, 1977, Ch 10)
அன்பின் திருவுருவங்களே! கர்மா ( செயல்) மட்டுமே ஒருவரது உண்மையான சக்தியை வெளிக் கொணர்ந்து, அவர் எவ்வளவு திறன் வாய்ந்தவர் என்பதை பிறருக்கு எடுத்துக் காட்டுகிறது. எவ்வாறு ஒரு கண்ணாடி, நமக்கே, நமது முகத்தைப் பிரதிபலிக்கிறதோ,அதைப் போலவே நீங்கள் செய்கின்ற கர்மா, உங்களது உண்மையான குணங்களை ஒரு காற்றழுத்த மானியைப் (BAROMETER) போல விளக்கிக் காட்டுகிறது. கர்மாவை அளக்கும் இந்தக் கருவி, உங்களது நிலைமை மற்றும் உங்களது மனப்பாங்கு ஆகியவற்றை கணித்து,நீங்கள் எந்த விதமான குணாதிசியங்களை கொண்டவர் (தமஸ்,ரஜஸ்,ஸாத்வீக) என்பதை எடுத்துக் காட்டி விடும். சில மனிதர்கள் மிகவும் ஸாத்வீகமானவர்களைப் போலத் தோன்றலாம்; ஆனால் அவர்கள் கர்மா ஆற்றும் போது, அந்த ஸாத்வீகத்தின் போர்வைக்குப் பின்னால் , ஓரளவு கடுமை இருப்பதை நாம் காணக் கூடும். சிலர், பேச்சில் மிகவும் கொடூரமானவர்களாகத் தோற்றமளிக்கலாம்; ஆனால் கர்மா ஆற்றும் போது, அவர்கள் மிருதுவானவர்களாகவும், கனிவானவர்களாகவும் ஆகி விடுகிறார்கள். எனவே, பிறரை அவர்களது தோற்றம் மற்றும் வார்த்தைகளை மட்டுமே வைத்துக் கொண்டு, கணித்து விடாதீர்கள். உண்மையில், மனித குணங்களை கணிப்பதற்கு, ஒருவர் ஆற்றும் கர்மாவைப் பரிசோதிப்பதை விட, கண்டிப்பான சோதனை எதுவும் இல்லை.