azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 01 Feb 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 01 Feb 2017 (As it appears in 'Prasanthi Nilayam')

Life is like a flight of steps toward the Divine. Your foot is on the first step when you are born; each day is a step that must be climbed. So be steady, watchful and earnest. Do not count the steps ahead or exult over the steps behind. One step at a time, well climbed, is enough success to be satisfied with and to give you encouragement for the next one. Do not slide from the step you have reached. Every step is a victory to be cherished; every day wasted is a defeat to be ashamed of. Slow and steady — let that be your maxim! Adhere to a regular timely routine to repeat the Lord’s Name and meditate. Just as the doctor prescribes a certain fixed quantity of the drug and warns you that anything less is ineffective and anything more is harmful, so too, balance your spiritual exercises. Do not overdo them or do them casually without care. (Divine Discourse, Mar 17, 1961)
வாழ்க்கை என்பது , இறைவனை நோக்கிச் செல்வதற்கான ஏணிப் படிகள் போன்றது. நீங்கள் பிறந்த போது முதல் படியை எடுத்து வைக்கிறீர்கள்; ஒவ்வொரு நாளும் ஏற வேண்டிய ஒரு படி போன்றது. எனவே, நிலைகுலையாமலும், கவனமாகவும், அக்கறையுடனும் இருங்கள்.மேலே ஏற வேண்டிய படிகளை எண்ணவும் செய்யாதீர்கள்; ஏறி வந்த படிகளைப் பற்றி பெருமகிழ்ச்சியும் கொள்ளாதீர்கள். ஒரு தருணத்தில் ஒரு படியாக, நன்கு ஏறி வந்ததே திருப்தி அடைய வேண்டிய ஒரு வெற்றியும், அடுத்த படியை ஏறுவதற்கான ஊக்கமும் ஆகும்.நீங்கள் ஏறி விட்ட படியிலிருந்து சறுக்கி விடாதீர்கள். ஒவ்வொரு படியும் நெஞ்சில் நிற்கக் கூடிய ஒரு வெற்றியே; வீணடித்த ஒவ்வொரு நாளும் வெட்கப்பட வேண்டிய ஒரு தோல்வியே. நிதானம் மற்றும் நிலைகுலையாமை- இதுவே உங்களது தாரக மந்திரமாக இருக்கட்டும் ! இறை நாமஸ்மரணை மற்றும் தியானத்திற்கு முறையான ஒரு குறிப்பிட்ட கால அட்டவணையைக் கடைப்பிடியுங்கள். எவ்வாறு ஒரு மருத்துவர், ஒரு குறிப்பிட்ட அளவிலான மருந்தைப் பரிந்துரைத்து, அதற்குக் குறைந்தால் பலனில்லை என்றும் அதிகமானால் தீங்கு விளைவிக்கும் என்றும் எச்சரிக்கிறாரோ, அவ்வாறே உங்களது ஆன்மீக சாதனைகளையும் சமச்சீராகச் செய்யுங்கள். அதிகப்படியாகவோ அல்லது கவனமின்றி ஏனோதானோ என்றோ செய்யாதீர்கள்.