azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 30 Jan 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 30 Jan 2017 (As it appears in 'Prasanthi Nilayam')

Practice the attitude of joy when others are joyful and of grief when others around you are aggrieved. Let your heart move in empathy. But the joy and grief have to be translated into service; they should not be mere emotions. It is not by your wearing the same 'bush coat' that all others wear that you should demonstrate the principle of equality; that is very easy. That is external uniformity. How are all equal? All are equal, because they all have the same Divine Consciousness (Chaitanya) within them. When the Sun rises, not all lotuses in the lake bloom; only the grown buds open their petals. The others await their time. It is the same with people. Differences do exist because of un-ripeness, though all fruits have to ripen and fall someday. Every being has to reach the Goal, however slow they walk or however circuitous their road is! (Divine Discourse, Apr 23, 1961)
மற்றவர்கள் சந்தோஷமாக இருக்கும்போது, சந்தோஷப்படுவது, மற்றும் பிறர் துக்கப் படும் போது, துக்கப்படுவது என்ற மனப்பாங்கினைப் பழகிக் கொள்ளுங்கள். உங்கள் இதயம் அனுதாப உணர்வால் நெகிழட்டும்.ஆனால், சந்தோஷமோ அல்லது துக்கமோ சேவையாக பரிமளிக்க வேண்டும்; வெறும் உணர்வுகளாக மட்டுமே இருந்து விடக் கூடாது.மற்றவர்கள் அனைவரும் அணிந்திருக்கும், அதே விதமான ஒரு ‘’புஷ் கோட்டை’’ நீங்களும் அணிந்து கொண்டு, நீங்கள் சமத்துவ உணர்வை வெளிப்படுத்த வேண்டும் என்று பொருளல்ல; அது மிகவும் எளிதானதே.அது வெளிப்படையான ஒரு சீர் தன்மையாகும். அனைவரும் எவ்வாறு சமமானவர்கள்? அனைவரும், தங்களுள் அந்த ஒரே தெய்வீக சைதன்யத்தை கொண்டிருப்பதால், அனைவரும் சமமே . சூரியன் உதிக்கும் போது, ஏரியில் உள்ள அனைத்து தாமரைகளும் மலர்வதில்லை; வளர்ந்து முதிந்த மொட்டுக்கள் மட்டுமே தனது இதழ்களை விரிக்கின்றன. மற்றவைகள் தங்களது தருணத்திற்காகக் காத்திருக்கின்றன. மனிதர்களும் அப்படியே. அனைத்து பழங்களும் கனிந்து என்றோ ஒருநாள் விழ வேண்டியது தான் என்றாலும், முதிர்ச்சி அடையாததால், வேற்றுமைகள் காணப்படுகின்றன. அவற்றின் நடை எவ்வளவு மெதுவாக இருந்தாலும், அவை செல்லும் பாதை எவ்வளவு சுற்றித் திரிவதாக இருந்தாலும், ஒவ்வொரு ஜீவராசியும், தனது இலக்கை அடைந்தே ஆக வேண்டும்!