azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 23 Jan 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 23 Jan 2017 (As it appears in 'Prasanthi Nilayam')

Your vision that is now turned outward towards the phenomenal universe, should be turned inwards towards the Indwelling Spirit. You must manifest the Divine Consciousness inherent within you. You must submit yourself to that Consciousness as a spiritual discipline. This is called ‘Conscious Realisation of the Inner Divine’. The first task is to develop awareness of the Divinity within you. The next stage is the realisation of the truth that the Divinity within is equally present in all others too. You must recognise that the veil or barrier that appears to separate you from others is born of delusion and every effort should be made to remove it. Only then will it be possible to experience the oneness of all living beings. Gradually the realisation, “I am indeed Divine and this world is contained in Me (Aham Eva Idam Sarvam)” will dawn upon you. (Divine Discourse, Feb 16, 1988
நிகழ்வுகளால் ஆன இந்த பிரபஞ்சத்தை நோக்கி வெளிப்புறமாக இருக்கும் உங்களது திருஷ்ட்டியை, உள்புறமாக, உள்ளுறையும் ஆத்மாவை நோக்கித் திருப்ப வேண்டும்.உங்களுள் இருக்கும் தெய்வீக பரப்ரம்மத்தை நீங்கள் வெளிப்படுத்த வேண்டும்.நீங்கள் அந்த பரப்ரம்மத்திற்கு உங்களை அர்ப்பணித்துக் கொள்வதை ஒரு ஆன்மீக சாதனையாகச் செய்ய வேண்டும். இதுவே, ‘’ ஆத்ம தெய்வீகத்தை மனம் விரும்பி உணர்வது ‘’ எனப் படுகிறது. உங்களுள் உறையும் தெய்வீகத்தைப் பற்றிய விழிப்புணர்வை வளர்த்துக் கொள்வதே முதல் பணியாகும். இதன் இரண்டாவது நிலை, உங்களுள் உள்ளுறையும் தெய்வீகம் அதே அளவில் அனைவருள்ளும் கூட உறைகிறது என்பதை உணர்வதே. உங்களை , மற்றவர்களிலிருந்து பிரிப்பது போலத் தோற்றமளிக்கும் திரை அல்லது தடுப்பு மாயையிலிருந்து தோன்றியது என்பதை நீங்கள் உணர்ந்து, அதை விலக்க எல்லா விதமான முயற்சிகளையும் செய்ய வேண்டும். அதன் பிறகே அனைத்து ஜீவராசிகளின் ஒருமையை உணர முடியும்.படிப்படியாக, ‘’ நான் உண்மையிலேயே தெய்வீகமானவன்: இந்த உலகும் என்னுள் அடங்கியதே ( அஹம் ஏவ இதம் ஸர்வம் )’’ என்பது உங்களுக்கு விளங்கும்.