azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 18 Jan 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 18 Jan 2017 (As it appears in 'Prasanthi Nilayam')

If the development of the moral and spiritual resources is neglected, remember, you are choosing to ignore the provision of peace and happiness. Happiness and peace do not automatically follow when a person is fed well, clothed well, housed well and even educated to a high standard and employed under comfortable conditions with no injury to health or security. There are millions who have these in plenty and are yet worried in pain or are highly discontented. Happiness and peace depend on the inner equipment of people, not on their outer skill or riches. All of you are fundamentally divine, and so, naturally, the more you manifest the Divine attributes of Love, Justice, Truth and Peace, the more joy you will be able to impart and enjoy yourself! If you choose to manifest less of the divine attributes, the more ashamed you ought to be, for you are living counter to your own heritage! (Divine Discourse, Aug 3, 1966)
நல்லொழுக்கம் மற்றும் ஆன்மீகத்தின் வளர்ச்சி புறக்கணிக்கப் பட்டால், சாந்தி, சந்தோஷங்களில் நீங்கள் அக்கறை காட்டாமல் இருப்பதைத் தேர்ந்தெடுத்துள்ளீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஒரு மனிதர் நன்றாக உணவு ஊட்டப்பட்டு,நல்ல ஆடைகள் அணிந்து, வளமான வீட்டில் வசித்து, உயர் தரமான கல்வியையும் கூட கற்று, ஆரோக்யம் மற்றும் பாதுகாப்பிற்கு எந்த பாதிப்பும் அற்ற சௌகரியமான சூழ்நிலையில் உத்யோகம் செய்து கொண்டு இருந்தாலும், சாந்தி, சந்தோஷங்கள் தானாகவே தொடரும் என்பதில்லை. இவை எல்லாம் அபரிமிதமாக பெற்று இருக்கும் கோடிக்கணக்கானவர்கள் இருக்கிறார்கள்; இருந்தாலும் அவர்கள் துன்பத்தில் துவண்டு, மிகவும் அதிருப்தி அடைந்தவர்களாக இருக்கிறார்கள். சாந்தி, சந்தோஷங்கள் மனிதர்களின் உள் மனப்பாங்கைப் பொறுத்ததே அன்றி, அவர்களின் வெளிப்படையான திறன்கள் அல்லது செல்வங்களைப் பொறுத்தது அல்ல.நீங்கள் அனைவரும் அடிப்படையில் தெய்வீகமானவர்களே; எனவே, இயற்கையாகவே, நீங்கள் எவ்வளவு அதிகமாக தெய்வீக குணங்களான, அன்பு, நீதி, சத்யம் மற்றும் சாந்தியை வெளிப்படுத்துகிறீர்களோ, அவ்வளவு அதிகமான ஆனந்தத்தை நீங்களும் அனுபவித்து, மற்றவர்களுக்கும் அளிப்பீர்கள் !இந்த தெய்வீக குணங்களை குறைவாக வெளிப்படுத்த நீங்கள் முடிவு எடுத்தால், நீங்கள் அதிகம் வெட்கித் தலைகுனிய வேண்டும்; ஏனெனில் நீங்கள் உங்களது சொந்த பாரம்பரியத்திற்கு மாறாக வாழ்ந்து கொண்டு இருக்கிறீர்கள் !