azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 13 Jan 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 13 Jan 2017 (As it appears in 'Prasanthi Nilayam')

This month, known as Pushyamaasa, according to the Hindu almanac is noted for the peacefulness, prosperity and joy which it brings with it. Hence it is regarded with special distinction. Unless people give up their bad thoughts and actions, the month, however great in itself, will be of no avail. Be loving even towards those who hate you. Control your anger and other evil tendencies. The observance of Uttarayana (the northward movement of the Sun which is considered auspicious) should be marked by spiritual transformation of the people and not by lavish feasting and revelry. You should realise how much you owe to God for all the benefits you enjoy in life which are really gifts from Him, including the air you breathe and the water you drink. Should you not be grateful to God for all this? Without gratitude, life is meaningless. (Divine Discourse, Jan 14, 1994)
இந்து பஞ்சாங்கத்தின் படி புஷ்ய மாஸம் எனப்படும் இந்த மாதம், அது தரும் சாந்தி, சம்பத்தி மற்றும் சந்தோஷத்திற்குப் பெயர் போனது. எனவே, இது தனிப்பட்ட முக்கியத்துவம் கொண்டதாகக் கருதப் படுகிறது. மனிதர்கள் தங்களது தீய சிந்தனைகள் மற்றும் செயல்களைக் கைவிடாவிடில், இந்த மாதம், எவ்வளவு மேன்மையானதாக இருந்த போதும் பயனற்றதே. உங்களை வெறுப்பவர்கள் மீதும் கூட, அன்புடன் இருங்கள்.உங்களது கோபம் மற்றும் தீய குணங்களைக் கட்டுப் படுத்துங்கள். உத்தராயணத்தைக் ( மங்களகரமானதாகக் கருதப்படும் சூரியனின் வடக்கு நோக்கிய நகருதலை) கொண்டாடுவது என்பது மக்களிடம் ஆன்மீக மனமாற்றத்தை ஏற்படுவதைக் குறிப்பதாக இருக்க வேண்டுமே அன்றி, ஆடம்பரமான விருந்து மற்றும் கேளிக்கைகளால் அல்ல. சுவாசிக்கும் காற்று மற்றும் அருந்தும் நீர் உட்பட,இறைவன் அளித்த பரிசுகளால் நீங்கள் மகிழும் அனைத்து அனுகூலங்களுக்காக, நீங்கள் இறைவனுக்கு எவ்வளவு கடமைப் பட்டுள்ளீர்கள் என்பதை நீங்கள் உணர வேண்டும்.இவைகளுக்கு எல்லாம் நீங்கள் இறைவனுக்கு நன்றி உள்ளவர்களாக இருக்க வேண்டாமா? நன்றியுணர்வு இல்லை எனில் வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லை.