azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 09 Jan 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 09 Jan 2017 (As it appears in 'Prasanthi Nilayam')

The person with Rajo Guna (the passionate quality),is one who is excessively happy when what is desired for is got. The ego gets fully inflated thereupon. If their desires are not fulfilled, they tend to develop hatred. Thus, for a person overwhelmed with Rajasicqualities, whether their desires are fulfilled or not, the effects are not good. Such persons are often consumed by anger and bitterness. Rajasic qualities make a person hot-blooded and hot tempered. When the Rajo Gunais strong, it arouses anger and hatred in a person, excites their blood and turns their eyes red. When Satwa Gunais filled in a person, they become pure. It becomes a redeeming quality when they perform meritorious actions with a pure heart, and do them as an offering to the Divine. At birth you may be ignorant, but when you leave this world, you must work hard to leave it as a realised soul (Jnani). (Divine Discourse, Jan 8, 1988)
விரும்பியது கிடைத்து விட்டால், அளவுக்கு அதிகமாக மகிழ்ச்சி அடைபவர் ரஜோ குணம் கொண்டவர்.அப்போது அஹங்காரம் முழுமையாக ஊதி உப்பி விடுகிறது. அவர்களது விருப்பங்கள் பூர்த்தி அடையாவிட்டால்,அவர்கள் க்ரோதத்தை வளர்த்துக் கொள்ள முனைகின்றனர்.இவ்வாறு, ரஜோ குணத்தால் ஆக்ரமிக்கப் பட்ட ஒருவருக்கு, அவர்களது ஆசைகள் பூர்த்தி ஆனாலும், ஆகாவிட்டாலும், விளைவுகள் நல்லவையாக இருப்பதில்லை. இப்படிப் பட்டவர்கள் பெரும்பாலும் கோபம் மற்றும் மனக்கசப்பிற்கு ஆளாகின்றனர். ரஜோ குணங்கள் ஒரு மனிதரை கொதித்து எழுபவராகவும், கோபம் கொண்டவராகவும் ஆக்கி விடுகிறது.ரஜோ குணம் வலுவாக இருக்கும்போது, அது கோபத்தையும், த்வேஷத்தையும் ஒருவருள் தூண்டி, அவரது இரத்தத்தை கிளர்ச்சி அடையச் செய்து, அவரது கண்களை சிவந்து விடச் செய்கிறது.ஒரு மனிதருள் ஸத்வ குணம் நிரம்பி இருக்கும் போது, அவர் பரிசுத்தமானவராக ஆகிறார்.புண்யகரமான கர்மாக்களை,தூய இதயத்துடன் ஆற்றி அவற்றை இறைவனுக்கு அர்ப்பணமாக அவர்கள் செய்யும் போது, அது அவர்களை மீட்கும் ஒரு குணமாகிறது. பிறக்கும் போது நீங்கள் அக்ஞானிகளாக இருந்திருக்கலாம், ஆனால் , இந்த உலகை விட்டுச் செல்லும்போது, ஒரு ஞானியாகச் செல்வதற்கு நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும்.