azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 08 Jan 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 08 Jan 2017 (As it appears in 'Prasanthi Nilayam')

Many banks in this world have safe deposit vaults where customers can keep their valuables, jewels, legal documents, etc. to protect them from thieves; they can then be free from worry and sleep in peace. The Bank dealing with spiritual accounts too has a safe deposit vault. Consign to that vault, to the care of the Lord, your jewels of intelligence, cleverness, ability to serve, and the gem that you value the most, namely your ego. Then you will be happy. In the Gita, Lord Krishna invites, “Surrender to Me alone (Maam Ekam Sharanam Vraja)”. If you do so, He assures you, “You need not grieve at all (Ma Shuchah)”. The normal banks deal with dhanam (money) which can be earned by anyone; even black marketeers and dacoits, crooks and pirates can amass this wealth. But that dhanamwhich is acceptable in the Spiritual Bank comes only to those who struggle to be virtuous and detached, humble and holy. (Divine Discourse, July 14, 1966)
இந்த உலகின் பல வங்கிகளில், வாடிக்கையாளர்கள் தங்களது விலை உயர்ந்த உடமைகள், நகைகள், பத்திரங்கள் ஆகியவற்றைத் திருடர்களிடமிருந்து பாதுகாப்பாக வைத்துக் கொள்வதற்கான காப்புப் பெட்டகங்கள் இருக்கும்.; அதன் பின்னர் அவர்கள் கவலை இன்றி நிம்மதியாகத் தூங்க முடியும். ஆன்மீகக் கணக்குகளைக் கையாளும் வங்கியிலும் ஒரு பாதுகாப்பான காப்புப் பெட்டகம் உள்ளது. உங்களது புத்தி , சாதுர்யம்,சேவை செய்யும் திறன் போன்ற நகைகளையும், நீங்கள் மிக அதிகமாக மதிக்கும் மாணிக்கமான அஹங்காரத்தையும், அந்தப் பெட்டகத்தில், இறைவனின் பாதுகாப்பில் வைத்து விடுங்கள். பின்னர் நீங்கள் சந்தோஷமாக இருக்கலாம். ஸ்ரீமத் பகவத் கீதையில் பகவான் ஸ்ரீகிருஷ்ணர், ‘’ என்னை மட்டுமே சரண்டையுங்கள் ( மாமேகம் சரணம்வ்ரஜ) ‘’ என அழைக்கிறார். நீங்கள் அப்படிச் செய்து விட்டால், அவர், ‘’நீங்கள் துக்கப் பட வேண்டியதே இல்லை ( மா சுசஹ)’’ என உறுதி அளிக்கிறார். சாதாரணமான வங்கிகள், எவர் வேண்டுமானாலும் ஈட்டக்கூடிய தனத்தைக் (பணத்தை) கையாளுகின்றன;கள்ளச் சந்தை வியாபாரிகளும், திருடர்களும், கயவர்களும், மேலும் கொள்ளைக்காரர்களும் கூடத் தான் இந்த செல்வத்தைக் குவித்துக் கொள்ள முடியும். ஆனால், நல்லொழுக்கம், பற்றின்மை, பணிவு மற்றும் பவித்ரமானவர்களாக இருக்கப் பாடுபடுபவர்களிடம் மட்டுமே, ஆன்மீக வங்கி ஏற்றுக் கொள்ளக் கூடிய தனம் வந்து சேரும்.