azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 17 Dec 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 17 Dec 2016 (As it appears in 'Prasanthi Nilayam')

A human being is not just a creature with hands, feet, eyes, ears, head and a trunk. One is much more than the total of all these organs and parts. These are merely like the crude image that comes out of the mould. Later, they must be ground, scraped, polished, perfected, smoothed, and softened through the higher impulses of the intellect, and pure intentions and ideals. Then one becomes the ideal candidate for Divinity, which is one’s true destiny. The impulses will be rendered pure and the intentions will be raised to the higher level, if and when one decides to dedicate all deeds, words and thoughts to the Lord. For this, faith in One Supreme Intelligence, which conceived, conserves and consumes this Universe, is essential. The next step is to be convinced of one's own helplessness and distress at one's own grief. Then surrender to that Intelligence is easily achieved. (Divine Discourse Mar 17, 1966)
ஒரு மனிதன் கைகள்,கால்கள்,கண்கள்,காதுகள், தலை மற்றும் ஒரு உடல் ஆகியவற்றைக் கொண்ட ஒரு ஜந்து மட்டும் அல்ல.ஒருவர் இந்த உறுப்புக்கள் மற்றும் பாகங்கள் அனைத்தின் கூடுதலை விடவே மிகவும் உயர்ந்தவராவார். இவை அனைத்தும் அச்சிலிருந்து வரும் ஒரு வெறும் செதுக்கப் படாத உருவம் போன்றவையே. பின்னர், அவை புத்தியின் உயர்ந்த தூண்டுதல்கள், தூய உள்நோக்கங்கள் மற்றும் இலட்சியங்களின் மூலம் , அரைக்கப் பட்டு, செதுக்கப் பட்டு, பட்டை தீட்டப் பட்டு,முழுமையாக்கப் பட்டு, மென்மையாக்கப் பட்டு, மிருதுவாக்கப் படவேண்டும்.பின்னரே ஒருவர், அவரது உண்மை நிலையான, தெய்வீகத்திற்கு ஏற்ற இலட்சிய மனிதராக ஆகிறார். எப்போது ஒருவர் தனது செயல்கள், சொற்கள் மற்றும் சிந்தனைகளை இறைவனுக்கு அர்ப்பணம் செய்ய முடிவு செய்கிறாரோ, அப்போதே அவரது உந்துதல்கள் தூய்மையானதாகவும், அவரது உள்நோக்கங்கள் ஒரு உயர்ந்த நிலைக்கு உயரவும் செய்கின்றன. இதற்கு, இந்த பிரபஞ்சத்தை படைத்து, காத்து, பின் அழிக்கும் அந்த பரப்ரம்மத்தின் மீது நம்பிக்கை கொள்வது அத்தியாவசியமானதாகும். இதற்கு அடுத்த படியாகச் செய்ய வேண்டியது, தனது இயலாமையையும், தான் படும் துன்பத்தின் வேதனையையும் ஏற்றுக் கொள்வதாகும். பின்னர் அந்த பரப்ரம்மத்திடம் சரணாகதி அடைவது என்பதை எளிதாக அடைய முடியும்.