azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 16 Dec 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 16 Dec 2016 (As it appears in 'Prasanthi Nilayam')

India's culture seeks to strike roots through mothers and the children on their laps. Women have been its custodians and promoters; men have a secondary role. And among women, girl students who will be women leaders in the coming days, must understand and practise this culture, so that it may be preserved and it may flourish. The keenness to acquire education is now very evident among the daughters of the nation and so, great hope can be placed on them in this field of reconstruction. Education must be for life, not for a living. Women in Indian history have proved throughout the centuries that they have the courage, the vision, and the intelligence needed to dive into the depths of spiritual science and discipline. Meera, Aandal, Maitreyi, Gargi, Sulabha, Choodala and Mahadevi are sterling examples of mighty heroines who undertook the spiritual adventure of God-realisation. (Divine Discourse, July 26, 1969)
பாரத கலாசாரம், தாய்மார்கள் மற்றும்,அவர்களின் மடியில் தவழும் குழந்தைகள் மூலமாகவே வேறூன்றி உள்ளது. பெண்மணிகளே அதன் பாதுகாப்பாளர்களாகவும் ,பேணிக் காப்பவர்களாகவும் இருந்திருக்கிறார்கள்; ஆண்களுக்கு ஒரு இரண்டாம் பட்சமான பங்குதான். பெண்மணிகளுக்குள், வருங்காலத்தில் தலைவிகளாக இருக்கப் போகும் மாணவிகள், அதைக் காத்து, செழிப்படையச் செய்வதற்கு ஏற்ப, இதைப் புரிந்து கொண்டு, இந்த கலாசாரத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். நாட்டின் பெண் குழந்தைகளிடம், கல்வி கற்பதில் ஆர்வம் இன்று தெளிவாகக் காணப்படுகிறது; எனவே, இதன் புனர் நிர்மாணத்தில், அவர்கள் மீது மிகுந்த நம்பிக்கை வைக்க முடியும்.கல்வி வாழ்க்கைக்காக இருக்க வேண்டுமே அன்றி வெறும் பிழைப்பதற்காக அல்ல. பாரதீய வரலாற்றில், பல நூற்றாண்டுகளாக,பெண்மணிகள், தாங்கள், ஆன்மீக விஞ்ஞானம் மற்றும் கட்டுப்பாட்டில் ஆழ்ந்து எழுவதற்குத் தேவையான தைரியம், தொலைநோக்கு மற்றும் புத்தியைக் கொண்டவர்கள் என்பதை நிரூபித்துக் காட்டி உள்ளார்கள். மீரா, ஆண்டாள்,மைத்ரேயி, கார்கி, சுலபா, சூடாலா மற்றும் மஹாதேவி போன்ற வலிமை வாய்ந்த வீராங்கனைகள் இறைவனை உணருதல் என்ற ஆன்மீக சாகசத்தை மேற் கொண்டவர்களுக்கான தலை சிறந்த உதாரணங்களாகத் திகழ்கிறார்கள்.