azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 25 Nov 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 25 Nov 2016 (As it appears in 'Prasanthi Nilayam')

You should make your own conscience secure, and you should have confidence in yourself. Your conscience is your guide and it should dictate your behavior. Either for the good or for the bad, it is your conscience that is responsible. The guilt in you causes the bad; the strength and confidence in you should, therefore, do such things which will promote your confidence in your own self. That is why I have repeatedly told you, that you should follow the four F’s. “Follow the Master” and that is your conscience. The second thing is to “Face the devil”. The third is “Fight to the end”. Then you should “Finish the game”. If you remember all these four injunctions such that they are resounding every moment in you, there can be nothing more sacred than this in your life. (Summer Roses on Blue Mountains, 1976, Ch 15)
நீங்களே உங்கள் மனச்சாட்சியை வலுவாக்கிக் கொள்ள வேண்டும்: உங்களுக்கு உங்கள் மீதே நம்பிக்கை இருக்க வேண்டும்.உங்களது மனச்சாட்சியே உங்களுக்கு வழி காட்டி:உங்களது நடத்தைக்கு அதுவே ஆணையிடுவதாக இருக்க வேண்டும். நல்லதானாலும் அல்லது தீயதானாலும்,உங்களது மனச்சாட்சியே அதற்குப் பொறுப்பாகும். உங்களுள் உள்ள குற்ற மனப்பாங்கே தீயதை விளைவிக்கிறது; எனவே,உங்களுள் உள்ள வலிமையும், தன்னம்பிக்கையும், உங்கள் மீது உங்களுக்கே நம்பிக்கை வளரக்கூடிய விஷயங்களைச் செய்ய வேண்டும்.அதனால் தான் உங்களுக்கு நான், திரும்பத் திரும்ப, நான்கு ‘’ F” களைப் பின்பற்ற வேண்டும் என்று கூறுகிறேன்.‘ FOLLOW THE MASTER “ அதாவது உங்களது மனச்சாட்சியைப் பின்பற்றுங்கள். இரண்டாவது , ‘’ FACE THE DEVIL’’, தீமையை எதிர் கொள்ளுங்கள். மூன்றாவது, ‘’FIGHT TO THE END’’, இறுதி வரை போராடுங்கள்.பின்னர் நீங்கள்,’’FINISH THE GAME’’ விளையாட்டைப் பூர்த்தி செய்யுங்கள்.இந்த நான்கு கட்டளைகளும், ஒவ்வொரு தருணமும் உங்களுள் எதிரொலித்துக் கொண்டு இருக்குமாறு, நீங்கள் நினைவில் வைத்துக் கொண்டீர்களானால், இதை விடப் புனிதமானது உங்கள் வாழ்க்கையில் வேறு எதுவும் இல்லை.