azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 22 Nov 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 22 Nov 2016 (As it appears in 'Prasanthi Nilayam')

Education is an ornament for you, it is your secret wealth that confers prosperity and fame. It is one's unfailing kinsman in foreign travel. More than wealth, this secures the respect of rulers. Education is the basis for leading a purposeful life in the physical world, in the realm of the mind and in society. It equips you with mental strength and steadiness to face the challenges in life and understand the myriad manifestations in Nature. Only when you understand the power of your mind, you can recognise the relationship between the world and society. Education should promote discrimination and humility, and enable you to recognise your obligations to your parents and others who have made you who you are today. Gratitude is a supreme virtue. Be grateful to your parents. Broaden your vision. Be aware of the Divinity that is inherent in every being. Cultivate the spirit of love and fill your life with joy. (Divine Discourse, Nov 22 1988)
கல்வி உங்களுக்கு ஒரு ஆபரணம் போன்றது ;அது உங்களுக்கு வளமும், புகழும் பெற்றுத் தரும் ரகசியமான செல்வமும் ஆகும். வெளிநாட்டுப் பயணத்தின் போது, தவறாத உறவினனும் ஆகும். செல்வத்தை விடவே, இது அரசாளுபவர்களின் மரியாதையையும் பெற்றுத் தருகிறது. பொருட்களால் ஆன இந்த உலகத்திலும், மனதளவிலும் மற்றும் சமுதாயத்திலும், அர்த்தமுள்ள வாழ்க்கை நடத்துவதற்கான அடிப்படை, கல்வியே. அது, வாழ்க்கையின் சவால்களை எதிர் கொள்வதற்கான மன வலிமை மற்றும் நிலைகுலையாமையை உங்களுக்கு அளிப்பதோடு, இயற்கையின் பல்வேறு வெளிப்பாடுகளைப் புரிந்து கொள்ள வைக்கிறது. உங்கள் மனதின் வலிமையைப் புரிந்து கொண்டால் மட்டுமே, நீங்கள் இந்த உலகிற்கும் , சமுதாயத்திற்கும் இடையே உள்ள உறவைப் புரிந்து கொள்ள முடியும். கல்வி, விவேகத்தையும், பணிவையும் ஊக்குவித்து, இன்று நீங்கள் இன்று இந்த நிலையில் இருப்பதற்குக் காரணமான உங்களது பெற்றோர்களுக்கும், மற்றவர்களுக்கும் நீங்கள் ஆற்ற வேண்டிய கடமைகளை உணரச் செய்ய வேண்டும்.நன்றியுணர்வே தலைசிறந்த நற்குணமாகும். உங்களது பெற்றோர்களுக்கு நன்றி உள்ளவர்களாக இருங்கள். உங்களது பார்வையை விசாலமாக்கிக் கொள்ளுங்கள். ஒவ்வொரு ஜீவராசியின் உள்ளும் உறையும் தெய்வீகத்தைப் பற்றிய விழிப்புணர்வுடன் இருங்கள்.ப்ரேமை உணர்வை வளர்த்துக் கொண்டு, உங்கள் வாழ்க்கையை ஆனந்தத்தால் நிரப்புங்கள்.