azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 18 Nov 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 18 Nov 2016 (As it appears in 'Prasanthi Nilayam')

Today the food you eat, water you drink and air you inhale are all polluted. People themselves are highly polluted because their minds are filled with negative feelings and worldly desires. No doubt, you can have desires, but they should be under limits. Many human hearts are a den of evil qualities like anger, hatred, greed, jealousy, pomp and show. Love alone can drive away these negative qualities. Desire, anger, greed, jealousy, etc., arise only out of body attachment and improper food habits. So control your attachment and desires. The letters that you write will appear blue when the pen is filled with blue ink and red when it is filled with red ink. Similarly all that you see, hear and say will be negative if your heart has negative feelings. Hence fill your heart with love. Then all that you see, hear, say and do will be suffused with love and you will experience a world suffused with love. (Divine Discourse, Aug 11, 2000)
இன்று நீங்கள் உண்ணும் உணவு,குடிக்கும் நீர், சுவாசிக்கும் காற்று, இவை அனைத்தும் மாசடைந்துள்ளன.அவர்களது மனங்கள் எதிர்மையான உணர்வுகள் மற்றும் உலகியலான ஆசைகளால் நிரம்பி இருப்பதால், மனிதர்களும் கூட வெகுவாக மாசடைந்துள்ளார்கள்.உங்களுக்கு ஆசைகள் இருக்கலாம், அதில் சந்தேகமில்லை; ஆனால்,அவை ஒரு வரையறைகளுக்குள் இருக்க வேண்டும். பல மனித இதயங்கள், கோபம், த்வேஷம், பேராசை, பொறாமை மற்றும் படாடோபம் நிறைந்த ஒரு குகையாக இருக்கின்றன.அன்பு ஒன்றே இந்த எதிர்மையான குணங்களை விரட்டி அடிக்க முடியும்.காமம், க்ரோதம், லோபம், மோஹம், மதம், மாத்ஸர்யம் போன்றவை, உடல் பற்று மற்றும் முறையற்ற உணவுப் பழக்கங்களினாலேயே எழுகின்றன.எனவே, உங்களது பற்றுதல் மற்றும் ஆசைகளைக் கட்டுப் படுத்துங்கள்.உங்களது பேனாவில் நீல நிற மை நிரப்பப் பட்டு இருந்தால், நீங்கள் எழுதும் எழுத்துக்கள் நீலமாகவும், சிவப்பு நிற மை நிரப்பப் பட்டு இருந்தால், சிவப்பாகவும் இருக்கும். அதைப் போலவே, உங்கள் இதயத்தில் எதிர்மறையான உணர்வுகள் இருந்தால், நீங்கள் பார்ப்பவை,கேட்பவை மற்றும் சொல்பவை அனைத்தும் எதிர்மறையாகவே இருக்கும்.எனவே, உங்கள் இதயத்தை அன்பினால் நிரப்புங்கள். பின்னர் நீங்கள் பார்ப்பது,கேட்பது,சொல்வது மற்றும் செய்பவை அனைத்தும் அன்பில் தோய்ந்திருக்கும்; நீங்கள் அன்பில் தோய்ந்த ஒரு உலகத்தை அனுபவிப்பீர்கள்.