azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 10 Nov 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 10 Nov 2016 (As it appears in 'Prasanthi Nilayam')

Arjuna earned the Spiritual Instruction (Geeta upadesh) from the Lord Himself, because he experienced deep sorrow (Vishada), detachment (Vairagya), surrender (Sharanagati) and the single-minded-concentration on the Lord (Ekagrata). When the yearning for Liberation becomes intense beyond expression, you can set aside all social conventions, worldly norms, etc. which does not subserve that high purpose. Just as Prahlada gave up his father, Bhishma countered his Guru, Meera deserted her husband and Shankaracharya won his mother over with deceit. To develop that taste for liberation, Namasmarana is the best path. Let the sweetness of the Lord’s Name saturated with the sugar of His splendor play on your tongue and mind always. This simple but supremely powerful exercise can be practiced by all at all times, irrespective of caste, creed, gender, social or economic status. (Divine Discourse, 16 Mar 1966)
ஆழ்ந்த சோகம்( விஷாதம்), பற்றின்மை(வைராக்யம்), பரிபூரண சரணாகதி, மேலும் இறைவனிடம் ஒருமித்த மனக்குவிப்பு (ஏகாக்ரதா) ஆகியவற்றை அனுபவித்ததால், அர்ஜூனன், பகவானிடமிருந்தே கீதோபதேசத்தைப் பெற்றான். ஆத்ம சாக்ஷாத்காரத்திற்கான ஏக்கம், விவரிக்க முடியாத அளவிற்குத் தீவிரமாகும்போது, எவ்வாறு பக்த பிரஹலாதன் தந்தையை விட்டு விட்டானோ, பீஷ்மர் தனது குருவை எதிர் கொண்டாரோ,மீரா தனது கணவனைக் கைவிட்டாளோ, ஆதி சங்கரர் தனது தாயாரிடமிருந்து தந்திரமாக அனுமதி பெற்றாரோ, அவ்வாறே நீங்கள், அந்த மிக உயர்ந்த குறிக்கோளுக்கு உதவாத அனைத்து சமூக சம்பிரதாயங்கள், உலகியலான விதிமுறைகள் ஆகியவற்றை ஒதுக்கி வைத்து விடலாம்.ஆத்ம சாக்ஷாத்காரத்திற்கான அப்படிப் பட்ட சுவையை வளர்த்துக் கொள்வதற்கு, இறை நாமஸ்மரணையே மிகச் சிறந்த பாதையாகும். அவனது தேஜஸ் எனும் சக்கரையுடன் கூடிய இறை நாமத்தின் இனிமை, உங்கள் நாவிலும் , மனதிலும் எப்போதும் தாண்டவமாடட்டும். ஜாதி, குலம், இனம், சமூக அல்லது பொருளாதார நிலை என்ற எந்த வேறுபாடும் இன்றி, அனைவரும், எப்போதும், எளிய, ஆனால், மிக உன்னதமான, இந்த பயிற்சியைக் கையாளலாம்.