azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 09 Nov 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 09 Nov 2016 (As it appears in 'Prasanthi Nilayam')

Of the 24 hours in a day, use six for earning and spending, six for contemplation of God, six for sleep and six for service to others. Most of you don’t even have five minutes to truly contemplate on the Lord, and you are not ashamed. What a tragedy! Ponder over your present condition (sthiti), the direction you are heading (gathi), your capabilities (shakthi) and your inclinations and tendencies (mathi). Then enter upon the path of spiritual practice, step by step, so you approach the goal steadily and swiftly, day by day. Indian culture advises the control of the senses, not catering to them. The car is driven by means of a wheel which is inside it, so that when the inner steering wheel is turned, the outer wheels move. Trying to move the outer-wheels alone is a sign of ignorance! Inner concentration must be developed in preference to outer distraction. Cultivate quietness, simplicity, and humility, instead of noise, complexity and conceit. (Divine Discourse, Mar 16, 1966)
ஒரு நாளின் 24 மணி நேரத்தில்,ஆறு மணி நேரத்தை பொருள் ஈட்டி, அதைச் செலவழிப்பதிலும்,ஆறு மணி நேரத்தை இறைச் சிந்தனையிலும், ஆறு மணி நேரத்தை உறங்குவதிலும்,ஆறு மணி நேரத்தை பிறரது சேவையிலும் பயன்படுத்துங்கள். உங்களில் பலருக்கு உண்மையில் இறைச் சிந்தனைக்கென்று ஐந்து நிமிட நேரம் கூட இருப்பதில்லை; அதற்காக நீங்கள் வெட்கப் படுவது கூட இல்லை. என்ன துர்பாக்யம் ! உங்களது தற்போதைய நிலை ( ஸ்திதி),நீங்கள் முன்னேறும் திசை ( கதி), உங்களது திறன்கள் ( சக்தி), விருப்பங்கள் மற்றும் மனப்பாங்குகள் ( மதி) ஆகியவற்றைப் பற்றி, ஆழ்ந்து சிந்தியுங்கள்.பின்னர், நாளுக்கு நாள், உங்கள் இலக்கை சீராகவும், விரைவாகவும் அணுகும் வண்ணம், ஆன்மீக சாதனை எனும் பாதையில் படிப் படியாகச் செல்லுங்கள்.பாரதீய கலாசாரம் புலனடக்கத்தை அறிவுறுத்துகிறதே அன்றி, அவற்றிற்குத் தீனி போடுவதை அல்ல. ஒரு கார் உள்ளே இருக்கும் சக்கரத்தின் மூலமே இயக்கப் படுகிறது; உள்ளே இருக்கும் ஸ்டீயரிங் வீல் திருப்பப் படும்போது, வெளியில் உள்ள சக்கரங்கள் நகருகின்றன. வெளியில் உள்ள சக்கரங்களை மட்டுமே நகர்த்த முயல்வது, அறியாமையின் ஒரு அறிகுறியே ! வெளிப்புற கவனச் சிதறலை விட, உள்ளார்ந்த மனக்குவிப்பை வளர்த்துக் கொள்வதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இரைச்சல், சிக்கல் மற்றும் அகந்தை ஆகியவற்றிற்குப் பதிலாக அமைதி,எளிமை மற்றும் பணிவை வளர்த்துக் கொள்ளுங்கள்.