azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 25 Oct 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 25 Oct 2016 (As it appears in 'Prasanthi Nilayam')

When you revel in the contemplation of the splendour of the Lord, nothing material can attract you. Everything this world has to offer will seem inferior. The company of the godly and the humble alone will be relished. Great saints who have sung the Grace of the Lord have realised Him in the altar of their own hearts. The unsullied love and devotion they transmitted through their songs has fertilized millions of devotees’ parched hearts. Reciting the Lord’s Name and observing their chosen spiritual practices have enabled many an aspirant to win over the Lord quickly and intimately. So strong and deep is their love and devotion that no disappointment could ever shake their faith. Ramdas, Tukaram, Meera and many others are wonderful examples of the above, and they have built the royal road of devotion for all of humanity. It is your duty now to live up to the heritage handed to you for your development by your pious forefathers. [Divine Discourse, Mar 17, 1966]
எப்போது நீங்கள் இறைவனது மகத்துவத்தைப் பற்றிய சிந்தனையில் திளைத்திருக்கிறீர்களோ, உலகியலான எதுவும் உங்களை ஈர்க்காது.இந்த உலகம் தரும் எதுவும் தரம் தாழ்ந்ததாகவே தோன்றும். பக்தர்கள் மற்றும் பணிவுள்ளோர்களின் நட்பு வட்டம் மட்டுமே, விரும்பத் தக்கதாக இருக்கும். இறைவனது அருளைப் போற்றிப் பாடிய தலை சிறந்த பக்தர்கள், தங்களது இதயமெனும் கர்ப்பக்ருஹத்திலேயே அவரை உணர்ந்திருக்கிறார்கள். தங்களது பாடல்களின் மூலம், அவர்கள் அளித்த களங்கமற்ற ப்ரேமையும், பக்தியும், கோடிக் கணக்கான பக்தர்களின் வரண்ட இதயங்களுக்கு வளமை தந்திருக்கின்றன. இறைவனது திரு நாமஸ்மரணையும், அவர்களே தேர்ந்தெடுத்துக் கொண்ட ஆன்மீக சாதனைகளும், பல சாதகர்களை இறைவனை விரைவாகவும், நெருக்கமாகவும் பெற உதவியிருக்கின்றன. அவர்களது ப்ரேமையும் பக்தியும், எந்த அளவு வலுவானதும், ஆழமானதும் என்றால், எந்த வித ஏமாற்றமும் அவர்களது நம்பிக்கையை ஒரு போதும் அசைக்க முடிந்ததில்லை.பக்த ராமதாஸர், துக்காராம், மீரா பாய் மற்றும் பலர் இதற்கான அற்புதமான உதாரணங்கள்; அனைத்து மனித குலத்திற்காக, அவர்கள் பக்தி எனும் ராஜபாட்டையை அமைத்துத் தந்துள்ளார்கள். பக்திமான்களாகிய உங்களது முன்னோர்கள், உங்களது முன்னேற்றத்திற்காக உங்களிடம் அளித்துள்ள பாரம்பரியத்திற்கு ஏற்ப வாழ்ந்து காட்டுவது, உங்களது கடமையாகும்.