azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 22 Oct 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 22 Oct 2016 (As it appears in 'Prasanthi Nilayam')

To enable us to earn the grace of the Lord, there are so many different paths. The paths of wisdom (jnana), action (karma), and yoga are more difficult than the path of devotion (Bhakti). Devotion will help us reach God, be close to God, and understand the Lord and His miracles. Amongst all the other paths, the shortest and easiest path is the path of love. God is an embodiment of love. To reach God and to understand His divinity, the path of love is the best approach. Divine love (prema) is not something which is fixed either on an individual, or a community, or a specific object. It is very wide, selfless and ever expanding. It is only when we broaden our love using these principles, we will be able to understand and experience the sacred divine love from God. [Summer Roses on Blue Mountains, 1976, Ch. 14]
நமக்கு இறை அருளைப் பெறச் செய்வதற்கு பல விதமான மார்க்கங்கள் உள்ளன.ஞான மார்க்கமும், கர்ம மார்க்கமும், யோகமும், பக்தி மார்க்கத்தை விட அதிகம் கடினமானவை. பக்தி, நம்மை, இறைவனை அடையவும், அவனுக்கு அருகாமையில் இருக்கவும், அவனையும் அவனது அற்புதங்களையும் புரிந்து கொள்ளவும் உதவுகிறது. அனைத்து மார்க்கங்களிலும், ப்ரேமையின் பாதையே மிகவும் குறைந்த தூரமானதும், எளிதானதும் ஆகும். இறைவன் ப்ரைமேயின் திருவுருவமே. இறைவனை அடைவதற்கும், அவனது தெய்வீகத்தைப் புரிந்து கொள்வதற்கும், ப்ரைமேயின் பாதையே மிகச் சிறந்த அணுகு முறையாகும். தெய்வீக ப்ரேமை என்பது ஒரு தனிநபர் அல்லது ஒரு சமூகம் அல்லது ஒரு குறிப்பிட்ட பொருளின் மீது நிலை கொண்டதல்ல. அது மிகவும் விசாலமானதும், தன்னலமற்றதும், என்றும் பரந்து விரிவதும் ஆகும். எப்போது நாம் இந்த கொள்கைகளைப் பயன்படுத்தி, நமது ப்ரேமையை விசாலமானதாக்கிக் கொள்கிறோமோ, அப்போது தான் நாம் இறைவனது பவித்ரமான தெய்வீக ப்ரேமையைப் புரிந்து கொண்டு அனுபவிக்க முடியும்.