azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 18 Oct 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 18 Oct 2016 (As it appears in 'Prasanthi Nilayam')

Many are not prepared to respect their parents. You may ask a question as to why one should respect one’s parents. Always, whatever actions you undertake, the reaction will come to you in the future. It is your duty to respect your parents for all that your parents have done for you. If today, you show respect to your parents, then your children will respect you when you grow up. If you make your parents suffer now, your children will do the same in return to you; and tears will flow from your eyes. If a student wants to lead a life of security and happiness in the future, he must undertake to lead a good life now. It is the beauty of your heart that is important. It is not the external beauty of the body that matters at all. When you have a pure and clean heart, you will have the strength to cleanse the world. (Summer Roses on Blue Mountains, 1976, Ch 13)
பலர் தங்களது பெற்றோர்களை மதிக்கத் தயாராக இல்லை. எதற்காக ஒருவர் தனது பெற்றோரை மதிக்க வேண்டும் என்று நீங்கள் ஒரு கேள்வி எழுப்பலாம். எப்போதும், நீங்கள் செய்யும் எந்த செயலுக்கும், விளைவுகள் உங்களுக்கு எதிர்காலத்தில் வரத்தான் செய்யும். உங்கள் பெற்றோர்கள் உங்களுக்குச் செய்த அனைத்திற்காகவும், அவர்களை மதிப்பது உங்கள் கடமையாகும். இன்று நீங்கள் உங்கள் பெற்றோருக்கு மதிப்பு அளித்தால், உங்களது குழந்தைகள், நீங்கள் முதியவர்களாகும் போது , உங்களை மதிப்பார்கள். உங்களது பெற்றோர்களை நீங்கள், இப்போது கஷ்டப்பட வைத்தால்,உங்களது குழந்தைகள் உங்களுக்கு அதையே திருப்பிச் செய்வார்கள்; அப்போது, நீங்கள் கண்ணீர் வடிக்க வேண்டி வரும். ஒரு மாணவர் எதிர்காலத்தில் பாதுகாப்பான மற்றும் சந்தோஷமான ஒரு வாழ்க்கை வாழ வேண்டும் என்று விரும்பினால், இப்போது ஒரு நல்ல முறையில் அவர் வாழ்க்கை நடத்த வேண்டும். உங்களது இதயத்தின் அழகே முக்கியமானதாகும். வெளிப்புறத்திலான உடல் அழகு ஒரு பொருட்டே அல்ல. உங்களிடம் ஒரு பரிசுத்தமான, தூய்மையான இதயம் இருந்தால், உங்களுக்கு இந்த உலகத்தையே தூய்மைப்படுத்தும் சக்தி இருக்கும்.