azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 17 Oct 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 17 Oct 2016 (As it appears in 'Prasanthi Nilayam')

Each one of you have your own strength and weakness, foibles and fears, skills and handicaps, so, no one prescription can be suggested for all. You must proceed from where you are presently, at your own pace, according to your own inner light. But, as long as one has caught a glimpse of the Atmic Reality, of the source from which one has emerged and the goal into which one is to merge, the goal of the journey will be reached sooner or later. The fascination for the body and the senses which dominate it, and the world which feeds the senses as well as the enchantment for the vainglorious adventures in search of fame and fortune - all this will become meaningless and fade away once you receive a glimpse of that Atmic Reality either through grace or through a Guru or through some other means. One will then have instead of deha-bhranti (body attachment) which now torments him, the yearning to know and be established in the Dehi, the Divine Indweller. (Divine Discourse, Mar 16, 1966)
உங்கள் ஒவ்வொருவருக்கும் உங்களுக்கே சொந்தமான பலமும், பலஹீனங்களும், குறைபாடுகளும், அச்சங்களும், திறமைகளும், ஊனங்களும் இருக்கின்றன; எனவே,ஒரே ஒரு விதமான பரிந்துரையை, அனைவருக்கும் அறிவுறுத்த இயலாது. உங்களது ஆத்ம ஜோதிக்கு ஏற்ப, நீங்கள் தற்போது எந்த நிலையில் இருக்கிறீர்களோ, அதிலிருந்து, உங்களுக்கே தகுந்த வேகத்தில் நீங்கள் முன் செல்ல வேண்டும். ஆனால், எந்த ஒரு ஆதாரத்திலிருந்து ஒருவர் தோன்றினாரோ, எந்த ஒரு குறிக்கோளில் ஒருவர் சங்கமம் ஆக வேண்டுமோ, அந்த ஆத்ம சத்தியத்தின் ஒரு சிறு காட்சியை ஒருவர் பெற்று விட்டார் என்றால், என்றோ ஒரு நாள் ,இந்தப் பயணத்தின் இலக்கு அடையப் பட்டு விடும். இறை அருளாலோ, அல்லது குரு மூலமோ அல்லது வேறு வழியிலோ, ஆத்ம சத்தியத்தின் ஒரு சிறு காட்சியை நீங்கள் பெற்று விட்டால், இந்த உடல் மீதுள்ள ஈர்ப்பு,அதை ஆதிக்கம் செலுத்தும் புலன்கள், இந்த புலன்களுக்குத் தீனி போடும் இந்த உலகம், மற்றும் பேரும், புகழும் வேண்டி இறுமாப்புடன் அலைவதில் இருக்கும் கவர்ச்சி- ஆகிய அனைத்தும், அர்த்தமற்றவையாகி, மறைந்து விடும்.பின்னர் ஒருவர், தன்னை வாட்டும் உடல்பற்றுதலுக்குப் ( தேஹ ப்ராந்தி) பதிலாக, உள்ளுறையும் பரப்பரம்மத்தை அறிந்து அதில் நிலை கொண்டு விட வேண்டும் என்ற ஏக்கத்தைப் பெற்று விடுவார்.