azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 13 Oct 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 13 Oct 2016 (As it appears in 'Prasanthi Nilayam')

Are you aware of the grand goal of your pilgrimage on earth? Do not stray into the bylanes and wrong roads, they will only lead you to disaster. You put a lot of faith in things outside yourself and plan to derive joy from and through them. Do you not know that all joys emanate only from the spring within you? You merely envelop the outer things with your own joy, and then, you experience it as though it is from that ‘other thing!’ The recognition of your innate Divinity and the regulation of your daily living in accordance with that Truth is the guiding star for every being, which is caught in the currents and crosscurrents of strife and struggle. Without that guiding divine light (Atmajnana), life will become a meaningless farce, a mockery, a game of fools. It is the acquisition of that Self-Awareness, which will make your life earnest and fruitful. (Divine Discourse, Mar 16, 1966)
இந்த உலகில் உங்களது வாழ்க்கை எனும் தீர்த்த யாத்திரையின் மகத்தான குறிக்கோள் எது என்பதை நீங்கள் அறிவீர்களா? நீங்கள் சந்து பொந்துகளிலும், தவறான பாதைகளிலும் வழி தவறிச் சென்று விடாதீர்கள்; அவை உங்களை பேரழிவில் கொண்டு விட்டு விடும். உங்களுக்கு புறத்தில் உள்ளவற்றில், நீங்கள் அதிகமாக நம்பிக்கை வைத்து, அவைகளிலிருந்தும், அவற்றின் மூலமும் சந்தோஷத்தைப் பெறத் திட்டம் இடுகிறீர்கள். அனைத்து சந்தோஷங்களும் உங்களுள் உள்ள ஆனந்த ஊற்றிலிருந்து தான் தோன்றுகின்றன என்பதை நீங்கள் அறிவீர்களா? வெளிப்புறத்தில் உள்ளவற்றை, உங்களது சொந்த ஆனந்தத்தால் வெறுமனே போத்தி, பின்னர் அதை அந்த மற்றவற்றில் இருந்து வந்ததாக எண்ணி அனுபவிக்கிறீர்கள். சண்டை சச்சரவுகளின் சூழலில் சிக்கித் தவிக்கும் ஒவ்வொரு ஜீவ ராசிக்கும், தனது உள்ளார்ந்த தெய்வீகத்தை உணர்வதும், தங்களது அன்றாட வாழ்க்கையை அந்த சத்தியத்தின் படி ஒழுங்கு படுத்துவதுமே, வழி காட்டி நக்ஷத்திரம் போன்றதாகும். அந்த ஆத்ம ஞானத்தின் வழி காட்டும் ஜோதி இன்றி, வாழ்க்கை ஒரு அர்த்தமற்ற கேலிக் கூத்தாகவும், பரிகாசமானதாகவும், மூடர்களின் ஒரு விளையாட்டாகவும் ஆகி விடும்.இந்த ஆத்ம ஞானத்தை அடைவது தான் உங்கள் வாழ்க்கையை ஊக்கம் அளிப்பதாகவும், பயனுள்ளதாகவும் ஆக்க வல்லது.