azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 11 Oct 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 11 Oct 2016 (As it appears in 'Prasanthi Nilayam')

Embodiments of Love! Vijaya Dasami marks the conclusion (samapti) of the sacred Navaratri festival. Samapti confers prapti (deservedness) in every possible way. Today I bless you with the deservedness to develop selfless love. Love contains all the other human values like truth, right conduct, non-violence and peace. Whatever you do, do it with Love. Your heart is like a big tank, and senses are like taps. Fill your heart with the water of Love. Then you will experience Divine Love through all your senses. Undertake good actions from this moment. Let everybody be happy. The essence of all scriptures is: “Help ever, Hurt never.” Do not hurt even an insect, for God is present in every being. Surrender to the Lord and say, “I am Yours,” and live up to it with strong faith. God will protect you at all times and under all circumstances. I bless you to have noble feelings, join good company, give-up vices and attain Divinity. (Divine Discourse, Oct 1, 1998)
ப்ரேமையின் ஸ்வரூபங்களே! விஜயதசமி, நவராத்ரிப் பண்டிகையின் முடிவைக் (ஸமாப்தியை) குறிக்கிறது. ஸமாப்தி, ப்ராப்தியை( பெறுவதற்கான தகுதியை) எல்லா விதத்திலும் அளிக்கிறது.இன்று, நீங்கள், தன்னலமற்ற ப்ரேமையை வளர்த்துக் கொள்வதற்கான தகுதியைப் பெற வேண்டும் என நான் ஆசீர்வதிக்கிறேன். ப்ரேமை, அனைத்து மனிதப் பண்புகளான, சத்யம், தர்மம், அஹிம்ஸை மற்றும் சாந்தியை தன்னுள் கொண்டது. நீங்கள் எதைச் செய்தாலும், ப்ரேமையுடன் செய்யுங்கள். உங்களது இதயம் ஒரு பெரிய தொட்டியைப் போன்றது; உங்களது புலன்கள் குழாய்களைப் போன்றவை. உங்களது இதயத்தை , ப்ரேமை எனும் நீரால் நிரப்புங்கள்.பின்னர், நீங்கள் , தெய்வீக ப்ரேமையை, உங்கள் புலன்கள் அனைத்தின் மூலம் அனுபவிப்பீர்கள். இந்தத் தருணத்திலிருந்து நல்ல செயல்களை ஆற்றுங்கள்.அனைவரும் ஆனந்தமாக இருக்கட்டும். அனைத்து சாஸ்திரங்களின் சாரமும், ‘’ எப்போதும் உதவி செய், ஒருபோதும் தீங்கிழைக்காதே’’ என்பது தான். ஒரு பூச்சியைக் கூடத் துன்புறுத்தாதீர்கள்,ஏனெனில், இறைவன் அனைத்து ஜீவராசிகளிலும் உறைகிறான். இறைவனை சரணாகதி அடைந்து,’’ நான் உன்னுடையவன்’’ எனக் கூறி, அதற்கேற்படி, வலுவான நம்பிக்கையுடன் வாழுங்கள். இறைவன் உங்களை எல்லாக் காலங்களிலும், எல்லா சந்தர்ப்பங்களிலும் காத்திடுவான். நீங்கள் சீரிய சிந்தனைகளைப் பெற்று,நல்லோரின் நட்பு வட்டத்தில் இணைந்து, தீய குணங்களை விடுத்து, தெய்வீகத்தைப் பெற வேண்டும் என நான் உங்களை ஆசீர்வதிக்கிறேன்.