azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 09 Oct 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 09 Oct 2016 (As it appears in 'Prasanthi Nilayam')

Dasara is the festival that celebrates the victory of good forces over evil energies. God has expressed Himself as the five natural elements. All creation is but a combination of these in varying proportions. You must use these abundant resources reverentially, with humility and gratitude. You know from experience that excessive quantities of wind, fire or water is injurious to health. If you drink more water than needed, it is a torture. When you inhale more air you will be suffocated and burn with excessive heat. Loud noise beyond a limit is destructive to peace. Hence realise that efficient use of natural resources is a form of worship. Nature (Prakrithi) is, in essence, Divinity itself. The universe is Divine. So tread softly and reverentially. Use them intelligently to promote your own well-being and that of the others. Use the natural resources in moderation and offer loving and intelligent service to the communities you live in. (Divine Discourse, 15 Oct 1966)
தசராப் பண்டிகை, தீய சக்திகளின் மீது நல்ல சக்திகள் பெற்ற வெற்றியைக் கொண்டாடுவதாகும். இறைவன் தன்னைப் பஞ்சபூதங்களாக வெளிப்படுத்திக் கொண்டுள்ளான். அனைத்து சிருஷ்ட்டியும், பல வித விகிதாசாரத்தில் உள்ள, இவற்றின் கலவையே அன்றி வேறில்லை. இந்த ஏராளமான வளங்களை , நீங்கள் பயபக்தியுடனும், பணிவுடனும், நன்றி உணர்வுடனும் பயன்படுத்த வேண்டும். அளவுக்கு மீறிய காற்றோ,நெருப்போ அல்லது நீரோ, ஆரோக்கியத்தைப் பாதிக்கும் என்பதை நீங்கள் அனுபவத்திலிருந்து அறிவீர்கள். நீங்கள் அளவுக்கு அதிகமாக நீரை அருந்தினால், அது ஒரு சித்திரவதையே. நீங்கள் அளவுக்கு மீறி காற்றை சுவாசித்தால், மூச்சுத் திணறுவீர்கள்; அதிக அளவு வெப்பம் உங்களைச் சுட்டுப் பொசுக்கி விடும். உரத்த அளவு சத்தம், அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும். எனவே, இயற்கை வளங்களை, திறமையாகப் பயன்படுத்துவது, ஒரு விதமான வழிபாடே என்பதை உணர்ந்திருங்கள். இயற்கை (ப்ரக்ருதி), ஒரு விதத்தில், தெய்வீகமே. இந்த பிரபஞ்சமும் தெய்வீகமே. எனவே, மிருதுவாகவும், மரியாதையுடனும், நடந்து கொள்ளுங்கள். அவற்றை உங்களது மற்றும் பிறரது நலனைப் பேணுவதற்காக, புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துங்கள். இயற்கை வளங்களை மிதமாகப் பயன்படுத்தி , நீங்கள் வசிக்கும் சமுதாயத்திற்கு, அன்பான மற்றும் அறிவுத் திறன் வாய்ந்த சேவை ஆற்றுங்கள்.