azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 06 Oct 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 06 Oct 2016 (As it appears in 'Prasanthi Nilayam')

To secure the grace of the Lord, you must have purity of heart, purity in speech and purity in action. This triple purity is described in Vedantic parlance as Tripurasundari. Lakshmi, who is the embodiment of all prosperity, is represented by the heart. The mouth represents Saraswathi. Purity in action (Kriya Shuddhi) is represented by Durga. By celebrating the Navaratri festival, you must get rid of the darkness within by cultivating this triple purity. You must also use the Navaratri celebration to revere Nature and consider how natural resources can be used properly in the best interests of mankind. Resources like water, air, power and minerals should be used wisely and not misused or wasted. Economy in the use of every natural resource is vital. Pollution of the air has many evil consequences. The significance of observances like Nagarasankirtan and bhajans is this - to fill the atmosphere with sacred vibrations and holy thoughts. (Divine Discourse, 27 Sep 1992)
இறைவனது அருளைப் பெறுவதற்கு, உங்களுக்கு, இதயத்தில் தூய்மை, சொல்லில் தூய்மை மற்றும் செயலில் தூய்மை இருக்க வேண்டும். வேதாந்த பரிபாஷையில், இந்த மூன்று தூய்மையே திரிபுரசுந்தரி என வர்ணிக்கப் படுகிறது. இதயம், அனைத்து வளத்தின் திருவுருவான லக்ஷ்மியைக் குறிக்கிறது. வாக்கு, சரஸ்வதியைக் குறிக்கிறது.செயல் தூய்மை (க்ரியா சுத்தி), துர்க்கையைக் குறிக்கிறது. நவராத்ரிப் பண்டிகையைக் கொண்டாடி,இந்த மூன்று தூய்மையையும் அபிவிருத்தி செய்து கொண்டு, நீங்கள் உங்களுள் உள்ள இருட்டைக் களைய வேண்டும். நவராத்ரி பண்டிகையை, நீங்கள் இயற்கையைப் போற்றுவதற்கும் பயன்படுத்தி, இயற்கையின் வளங்களை மிகச் சிறந்த முறையில் மனித குலத்தின் நன்மைக்காக எவ்வாறு பயன்படுத்துவது என்பதைக் கவனிக்க வேண்டும். இயற்கை வளங்களான,நீர், காற்று, சக்தி மற்றும் கனிமப் பொருட்களை, புத்திசாலித்தனமாகப் பயன்படுத்த வேண்டும்; அவற்றைத் தவறாகப் பயன்படுத்தவோ அல்லது வீணடிக்கவோ கூடாது. ஒவ்வொரு இயற்கை வளத்தைப் பயன்படுத்துவதிலும் சிக்கனம் மிகவும் அத்தியாவசியம். காற்று மாசடந்தால், பல தீய விளைவுகளை உண்டாக்கும். சுற்றுச் சூழலை தெய்வீக அதிர்வுகளால் நிரப்புவதே, நகரஸங்கீர்த்தனம் மற்றும் பஜனை போன்ற ஆன்மீக சாதனைகளின் தனிச் சிறப்பாகும்.