azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 02 Oct 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 02 Oct 2016 (As it appears in 'Prasanthi Nilayam')

Gandhi, who was an ordinary person, was able to achieve greatness and world renown, because of the lessons in good behavior he learnt from his mother. The mother observed a vow: she would take her food only after the cuckoo sang in the morning. Once when Gandhi was a boy, the mother was waiting for a long time to hear the call of the cuckoo. Observing this, Gandhi went out of the house, imitated the call of the cuckoo and came in and told his mother that the cuckoo had sung and that she could take her food. The mother, who saw through her son's trickery, slapped him on the cheek and said, "You wicked fellow! What sin must I have committed to bear a son like you?" She felt very sad. Her grief touched the heart of Gandhi. From that moment Gandhi took a firm resolve never to utter a lie again. (Divine Discourse, 6 May 1992)
ஒரு சாதாரண மனிதரான காந்தியால், தனது தாயிடம் கற்ற நன்னடத்தையின் பாடங்களின் காரணமாக , மேன்மையையும், உலகப்புகழையும் பெற முடிந்தது. அவரது தாயார் ஒரு விரதம் பூண்டிருந்தார்;அவர் , குயில் கூவிய பிறகே, காலையில் உணவு அருந்துவார்.ஒருமுறை காந்தி சிறுவனாக இருந்த போது, அவரது தாயார் வெகு நேரம் குயிலின் கூவுதலுக்காகக் காத்திருந்தார். இதைப் பார்த்த காந்தி,வீட்டிற்கு வெளியே சென்று, குயில் போலக் கூவி விட்டு, உள்ளே வந்து தனது தாயாரிடம், குயில் கூவி விட்டதாகவும், இனிமேல் அவர் உணவு அருந்தலாம் என்றும் கூறினார். அவரது தாயார், தனது மகனின் ஏமாற்று வித்தையைக் கண்டு கொண்டு, அவரை கன்னத்தில் அறைந்து, ‘’ திருட்டுப் பயலே! உன்னைப் போல ஒரு மகனைப் பெறுவதற்கு நான் என்ன பாவம் செய்தேனோ ? ’’ என்று கூறி மிகவும் துக்கமடைந்தார்.அவளது துக்கம் காந்தியின் இதயத்தைத் தொட்டது. அந்த நிமிடத்திலிருந்தே, காந்தி, இனி ஒரு போதும் பொய் பேசுவதில்லை என்ற உறுதியான ஒரு பிரதிக்ஞை எடுத்துக் கொண்டார்.