azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 27 Sep 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 27 Sep 2016 (As it appears in 'Prasanthi Nilayam')

Embodiments of Love! There is no need to search for God anywhere, says the Bible. Today people are in search of God. Why do you search for Him when He is everywhere? You are God. All spiritual practices (sadhana) will go in vain if you do not know your true identity. Instead of asking others, “Who are you?” it is better to ask yourself, “Who am I?” “This is my book”, we say. Then who is this “I”? This feeling of “my” is illusion (maya). Know who you are. All this is matter, it is negative. You are the master of this material world. Master the mind and be a mastermind. Make every effort to know your true identity. To know this, you should first give up body attachment. People are heroes in doing experiments in the laboratory, but zeroes in experience. Instead, be heroes in the practical field. (Divine Discourse, March 14,1999)
அன்பின் திருவுருவங்களே! இறைவனை எங்கும் தேடவேண்டிய அவசியம் இல்லை என்கிறது பைபிள்.இன்று மனிதர்களோ இறைவனைத் தேடிய வண்ணம் இருக்கிறார்கள். அவன் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் போது, அவனை ஏன் தேட வேண்டும்? நீங்களே இறைவன் தான். நீங்கள் உங்களது உண்மையான அடையாளத்தைத் தெரிந்து கொள்ளவில்லை என்றால், அனைத்து ஆன்மீக சாதனைகளும், வீணே. மற்றவர்களை, ‘’ நீங்கள் யார்?’’ என்று கேட்பதற்கு பதிலாக, உங்களையே நீங்கள், ‘’ நான் யார்? ‘’என்று கேட்டுக் கொள்வதே சிறந்தது. “ இது என்னுடைய புத்தகம்’’ என்று நாம் சொல்லுகிறோம். அப்படி என்றால் இந்த ,’’ நான்’’ என்பது யார்? இந்த ‘’ என்னுடையது’’ என்ற உணர்வே மாயை. நீங்கள் யார் என்று தெரிந்து கொள்ளுங்கள்.இவை அனைத்தும் பொருட்களே; இது எதிர் மறையானது.நீங்கள் இந்த பொருட்களாலான உலகின் அதிபதி. உங்கள் மனதை வெல்லுங்கள்; ஒரு மாமனிதராக இருங்கள்.உங்களது உண்மையான அடையாளத்தைக் கண்டு கொள்ள எல்லா முயற்சியும் செய்யுங்கள். இதைத் தெரிந்து கொள்வதற்கு, முதன் முதலில் நீங்கள் உடல் பற்றுதலை விட்டு விட வேண்டும். ஆய்வுக் கூடங்களில்,பரிசோதனைகள் செய்வதில் மனிதர்கள் ஹீரோக்கள்; ஆனால் அனுபவத்தில் வெறும் ஜீரோக்கள். அதற்கு பதிலாக, அனுபவத் துறையில் ஹீரோக்களாக இருங்கள்.